Header Ads



பிரேசில் கால்பந்து வீரர்கள், 10 பேர் தீ விபத்தில் மரணம்

பிரேசில் கால்பந்து நட்சத்திரங்கள் 10 பேர் தீ விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ள சம்பவம் உலக கால்பந்து ரசிகர்களை உலுக்கியுள்ளது.

பிரேசில் கால்பந்து ஜாம்பவான்களை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய அணிகளில் ஒன்று ஃப்ளெமெங்கோ.

இந்த அணியின் 15 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் 9 பேரே தீவிபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர்.

ஃப்ளெமெங்கோ அணியில் விளையாடும் ஆர்தர் வினிசியஸ் என்ற நட்சத்திர வீரரின் பிறந்தநாளை சனிக்கிழமை கொண்டாட இருந்தனர்.

15 ஆம் பிறந்தநாள் என்பதால் அவரது தாயார் தங்களது கிராமத்தில் இருந்து ரியோ நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

ஆனால் ரியோவில் உள்ள ஃப்ளெமெங்கோ கால்பந்து அகாடமி செல்லும் முன்னரே அந்த நெஞ்சை உலுக்கும் தகவல் அந்த தாயாரை எட்டியுள்ளது.

ஃப்ளெமெங்கோ கால்பந்து அகாடமியில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது அன்பு மகன் ஆர்தர் வினிசியஸ் மரணமடைந்துள்ளார்.

நீண்ட பல நாட்களுக்கு பின்னர் அன்பு மகனை காண பல மைல்கள் கடந்து சென்ற அவருக்கு இந்த துக்க வார்த்தை தாங்குவதிலும் அதிகமாக இருந்துள்ளது.

ஆர்தர் வினிசியஸ் ஃப்ளெமெங்கோ கால்பந்து அகாடமியில் நட்சத்திர வீரராக வலம் வந்தவர். நாளை பிரேசில் அணியின் மஞ்சள் சட்டை அணிந்து விளையாடும் வாய்ப்பு அவருக்கு அமையலாம்.

மட்டுமின்றி ஒரு காலத்தில் ஐரோப்பிய கால்பந்து அணிகளில் ஒன்று அவரை கொத்திக்கொண்டு செல்லலாம்.

ஆனால் எல்லாமே ஒரே ஒரு நாளில் முடிவுக்கு வந்துள்ளது. ஆர்தர் வினிசியஸ் மட்டுமின்றி அந்த தீ விபத்தில் மேலும் 9 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் ஃப்ளெமெங்கோ கால்பந்து அணியே மொத்தமாக இந்த உலகைவிட்டு விடைபெற்று சென்றுள்ளதாக கால்பந்து ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.