Header Ads



ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமித்தது ஏன்..? அரியநேத்திரனின் அரிய கண்டுபிடிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கொண்ட கோபத்திற்கான பழி தீர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாவை ஜனாதிபதி நியமித்தமை தொடர்பாக ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு. அவர்களை பிரதமரோ, அமைச்சர்களோ நியமிப்பதில்லை. தற்போது கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற ஏறக்குறைய ஒருவருடம் மட்டுமே உள்ளது. அதற்கிடையில் ஆளுநர்களை மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆனால் ஜனாதிபதி தமது விருப்பத்துக்கு அமைவாக அதை செய்துள்ளார்.

அதில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக, ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்த ஹிஷ்புல்லாவை நியமித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது கொண்ட ஆத்திரத்தை தீர்த்து ஜனாதிபதி சாதித்து விட்டார் என்பதே உண்மை என குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. தோற்றுப்போய் இன்று வங்குரோத்து அரசியல் செய்யும் இவனால் இப்படி தான் பேசமுடியும். புலி பயங்கரவாதிகளால் எத்தனை அநியாயங்களை முஸ்லிம்கள் சந்தித்தார்கள் அதைப்பற்றியும் நேர்மையாக பேசுவானா இந்த மொக்கு கிறுக்கன்?

    ReplyDelete
  2. நண்பர் அரியநேத்திரன் அவர்களே இனவாதத்தைச் ஏற்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேட முயற்ச்சிக்கின்றீர்கள்

    ReplyDelete
  3. அரியநேத்திரன் ஒரு பெரும் அரசியல் விஞ்ஞானி என்பது நம்முள் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

    ReplyDelete
  4. உண்மையான இனவாதி யார் என்பதை இவர் நிரூபிக்கிறார்.வடக்கு உங்களுக்கு என்றால் கிழக்கு எங்களுக்கு. நாங்கள் தான் அங்கே பெரும்பான்மை. வழக்குக்கு தமிழ் ஆளுனரை கேளுங்கள். கிழக்குக்கு முஸ்லிம் ஆளுனர் கிடைப்பதை விமர்சிக்க வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.