Header Ads



ஹிஸ்புல்லாக்கு ஹரீஸ் வாழ்த்து - இணைந்து செயற்படவும் விருப்பம்

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் என்றவகையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் முதன் முதலாக ஆளுநராக நியமிக்கப்பட்டமையினை இட்டு பெருமையடைகின்றேன். இப்பதவிக்காலத்தில் இன, மத, கட்சி பேதமின்றி உங்களுடைய நடவடிக்கைகள் அமையும் என்று நம்புகின்றேன். 

அந்தவகையில் பழுத்த அனுபவம் கொண்ட அரசியல் தலைமையான நீங்கள் இந்த மாகாண சபையினை வினைத்திறன் மிக்கதாக வழிநடத்துவீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்குள்ளது. 

கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் என்றவகையில் நீங்களும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் என்றவகையில் நானும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் எம்மிருவருக்கும் இருக்கின்றது.    

அந்த அடிப்படையில் எனது அமைச்சின் ஊடாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளில் பல அபிவிருத்திகளை நான் சார்ந்த பிரதேசம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றேன். அவ்வபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை கோருகின்றேன். 

கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் குறிப்பாக இளைஞர் யுவதிகளுக்கு வளமான எதிர்காலத்தை தோற்றுவிப்பதற்கும் நாமிருவரும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுவதற்கு இறைவன் அருள்புரிய பிரார்த்திப்பதோடு உங்கள் பணிகள் சிறப்பாக இடம்பெற மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார். 

(அகமட் எஸ். முகைடீன்)


2 comments:

  1. Dear Hon. Hisbullah and Haris, please both work together to do the best for the eastern muslim community who are victims of racist tamil administrative officials and tamils ugly politicians...

    ReplyDelete
  2. விமர்சனம் செய்து கொண்டும் ஆர்ப்பாட்டம், கர்த்தால் செய்ய விரும்பும்
    பன்னாடைகளை கணக்கில் எடுக்க வேண்டாம். அழிவை ஏற்படுத்துவதையே தொழிலாகவும் இலட்சியமாகவும் கொண்டவர்களிடம் ஆக்கபூர்வமான எதுவொன்றையும் எதிர்பார்க்க முடியாது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

    கிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவருக்குமானதாகும். யுத்தத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழ்வு மேம்பட நீங்கள் அதிகம் பாடுபட வேண்டும். ஆனால் நன்றியை எதிர்பார்த்து செய்ய வேண்டாம்.

    உங்களோடு இணைந்து செயற்படும் அனைத்து தலைவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். யுத்தத்தால் நலிவுற்ற கிழக்கை கட்டியெழுப்புங்கள். தமிழ் ஆயுதக்குழுக்களும், இலங்கை இராணுவமும் கிழக்கை அழித்துக் காட்டினார்கள். நீங்கள் அனைவரும் சேர்ந்து கிழக்கை கட்டியெழுப்பிக் காட்டுங்கள். அதுவே இவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பதிலடி.

    ReplyDelete

Powered by Blogger.