Header Ads



புத்தர் சிலை உடைப்பு, விசாரணைகள் புதிய கோணத்துக்கு திரும்பின

(எம்.எப்.எம்.பஸீர்)

கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில்  நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகள் புதிய கோணத்துக்கு திரும்பியுள்ளன. 

இது குறிட்ர்ஹ்த விசாரணைகளில், இலங்கையில் அடிப்படை வாத சிந்தனையை மையபப்டுத்தி ஆயுதக் குழுவொன்று உருவாக எத்தனிக்கின்றமை தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தியுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி.) அது குறித்த விசாரணை வலயத்தை விரிவுபடுத்தியுள்ளனர்.

 குறிப்பாக புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் நேரடியாக தொடர்புபட்டதாக கருதப்பட்டு தேடப்பட்டு வரும் சாதிக் அப்துல்லா, சாஹித் அப்துல்லா ஆகிய சகோதரர்களுக்கு மேலதிகமாக பலராலும் அறியபப்டும் மெளலவி ஒருவர் உள்ளிட்ட மேலும் பலர் அந்த விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

நாடளவைய ரீதியில் புத்தி சாதுர்யமான இளைஞர்களை ( 18 முதல் 25 வரை வயது) தெரிவு செய்து அவர்களுக்கு அடிப்படைவாத சிந்தனைகளை விதைத்து, ஆயுத கலாசாரத்துக்கு மாற்றி யுத்தம் ஒன்றினை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு ஒரு குழு செயற்பட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே விசாரணை வலயம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுவரை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தை மையபப்டுத்தி இடம்பெற்ற விசாரணைகளில் 15 பேர் (பிரபல மெளலவி ஒருவர் உட்பட) கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே  இவ்விசாரணைகள் தீவிரப்படுத்தப்ப்ட்டுள்ளன. இதற்காக அறிவியல் தடயங்கள் மற்றும் சாட்சிகளை சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவொன்று சேகரித்து ஆராய்ந்து வருவதாக அறியமுடிகின்றது.

2 comments:

  1. imthiyas hussain, wait and see until investigations over. don't pass judgement in a hurry.

    ReplyDelete
  2. Also apply the same type of investgation to to the racist who invoved in detroying many masjids, shops and houses in Digana violece if you are not biased ....

    ReplyDelete

Powered by Blogger.