January 07, 2019

கட்டுக்கெலியாவ சியாறத்திற்கு அஞ்சும் சிங்களவர்கள் - முஸ்லிம்களின் கட்டிடக்கலைக்கு ஆதாரம்

இலங்கை முஸ்லிம்களின் இருப்பின் #தொல்லியல்_ஆதாரங்களாக விளங்கும் சியாறங்களுக்கு மத்தியில் முஸ்லிம்களின் கட்டிடத்திறமைக்கான ஆதாரமாகவும் விளங்கும் கட்டுக்கெலியாவையில் உள்ள ஒரு வரலாற்று ஆதாரம் பற்றிய பதிவே இதுவாகும்...

#அமைவிடம்,

   தம்புள்ள பிரதேசத்தில் இருந்து #கெகிராவை நோக்கிச் செல்லும் பாதையில் "#மடாடுக்கம சந்தியில் இருந்து  இடது புறம் உள்நோக்கி பிரிந்து செல்லும் அழகிய மரங்கள் நிறைந்த பாதையினூடாகச் செல்லும் போது" புப்போகம, நகரைத் தாண்டிச் செல்லும் உட்பாதையில் அமைந்திருக்கும் அழகிய இயற்கை வனப்புமிக்க கிராம்மே "கட்டுக்கெலியாவ"இது ஒரு.அழகிய விவசாயக் கிராமம்

இப்பிரதேசம் #அனுராதபுர_மாவட்டத்தின் தன்மைக்கேற்ப பெரும்பாலான சிங்கள மக்களையும், சிறுபான்மை முஸ்லிம்களையும் கொண்ட கிராமங்களில் ஒன்று,     இவ் ஊரின் "#பழையபள்ளி" என அழைக்கப்படும் மஸ்ஜிதுல் .ஷாபி வளவில்  அமைந்துள்ள சியாறமே #அஷ்ஷெய்க் #காஸிம்_வலியுள்ளா சியாறமாகும்.

#புராதனம், 

குறித்த ஊரும், அதன் பள்ளிவாசலும் மிகப் புராதனமானதாக இருப்பினும் தற்போது ,பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு புதிய தோற்றத்தில் காட்சி தருகின்றது, இப்பள்ளி வாசல் ஹிஜ்ரி 1132 க்கு #முந்தியது என ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன, ஆனாலும் இப்பள்ளியின் அருகில் உள்ள சியாறமே இப்பள்ளியினதும், குறித்த பிரதேசத்தினதும், புராதனத்தை கூறும் பல ஆதாரங்களைக் கொண்டுள்ளது, 

யார் இந்த அவுலியா?

இங்கு அடங்கப்பெற்றிருக்கும் பெரியார் #அஷ்ஸெய்யது_காஸிம்_வலியுள்ளாஹ் என அழைக்கப்படுகின்றார்கள், இவர்கள் இந்தியாவின் அந்தோராத் தீவில் இருந்து இலங்கை  வந்து  சன் மார்க்க, மற்றும் சமூக சீர்திருத்தப் பணி புரிந்தவர்கள் என்றும், இவர்களது மார்க்க உறவினர்கள், கிழக்கு மாகாணத்தில் அடங்கப் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகின்றது, இவர்களது இறப்பு ஹிஜ்ரி 1323, அதாவது நூறு வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்று ஆதாரமாக இச்சியாறம் திகழ்கின்றது, 

ஆரம்ப காலத்தில் இக்கிராமத்தில் 5 முஸ்லிம்  குடும்பங்களே வாழ்ந்த்தாகவும், சுற்றி உள்ள #புப்போகம், #பண்டாரப்பொத்தான போன்ற கிராமங்களுக்கு மத்தியில் இப்பள்ளிவாசல் அமைந்திருந்த தனால் , இப்பள்ளியை மையமாகக் கொண்டே குறித்த பெரியார், தனது சன்மார்க்கப்பணி புரிந்து பல நல்ல  மாற்றங்களை இக்கிராமங்களில், மேற்கொண்டுள்ளார்கள் என ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

#இன_ஒற்றுமையும், #பாதுகாப்பும், 

குறித்த பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்கள் "#கட்டுக்கெலியாவ_பள்ளிய" என்றால் மிகுந்த மரியாதையும்,அச்சம்  உள்ளவர்களாகவும் இருப்பதாக, "மதார் ஸாஹிப் " குறிப்பிடுகின்றார், 

இன்னும் இப்பிரதேசத்தில் இடம்பெறும் களவுகள் குறிப்பாக, ஆடு,மாடு, கோழி போன்ற உயிரினங்களைத் திருடுவோர், இப்பெரியாரின் பெயரைச் சொன்னால் இன்றும் பயப்படுவதாகவும்,குறித்த பொருட்களை ,உயிரினங்களை மீண்டும்  உரியவரிடம் ஒப்படைத்து விடுவதாகவும்,   அதற்கு ஆதாரமாக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பிரதேச வாசிகள் குறிப்பிடுகின்றனர்,

JVP கிளர்ச்சி காலத்தில் கட்டுக்கெலியாவையும், அதைச்சுற்றி உள்ள ஊர்களையும் ,கிளர்ச்சியாளர்கள் தாக்கி, அழிக்காமல் இருந்தததற்கான  காரணங்களில் ஒன்று இச் #சியாறத்தின்மீதான_அச்சம் என்றும் குறிப்பிடுகின்றனர், அதையும் மீறி வந்த   பலர் காயப்பட்டு, விரண்டோடியதாகவும் சம்பவங்கள்  குறிப்பிடப்படுகின்றது,

#தொல்லியல்_சான்றுகள், 

குறித்த அனுராதபுர மாவட்டம், இலங்கை #சிங்கள_மக்களின் #இதயங்களில். ஒன்றாகும் ,அவர்களது பல சமய, மற்றும் சமூக ஆதாரங்களும், நினைவிடங்களாலும் நிறைந்துள்ள மாவட்டமாக மட்டுமல்ல, அவை #தொல்லியல்_ஆதாரங்களாக (Archeological proofs)இருப்பதனால் இப்பிரதேச மக்களின் அன்றாட இருப்பிலும் பலமான செல்வாக்கைக்கொண்டுள்ளன, 

அவ்வாறான ஒரு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான இச்சியாறமும், அதனைச்சுற்றியுள்ள ஆதாரங்களும் மிகவும் பெறுமதியானதாகவே நோக்கப்பட வேண்டும், ஏனெனில் #சிங்கள  #தொல்லியலுக்கு_நிகரான ஒரு ஆதாரமாக இன்றும் இப்பிரதேசத்தில் எஞ்சி இருப்பது  இச்சியாறம் மட்டுமே,

#கட்டிடகலை_ஆதாரம் 

குறித்த சியாறத்தின் முன்வாசலில் பெரிய கருங்கற்கள் நடப்பட்டுள்ளன, இவை ஆரம்பத்தில் குறித்த பள்ளிவாசலை நிர்மாணிக்கும் போது தூண்களை நிறுவப் பயன்படுத்தப்பட்டதாகவும், இன்றைய கொங்கிறீட் அடித்தளங்களை விட மிகப்பலமானவையாகவும் இருந்துள்ளன, அவற்றினையும் இச்சியாறத்தின் முன் பிரதான வாசலில் நட்டிருப்பது இவ் இடத்தின் புராதனத்தை இன்னும் மெருகூட்டுகின்றது,மட்டுமல்ல, 
எம் முன்னோரின் கட்டிடக்கலைக்கான நுட்பத்தையும் பறைசாற்றுகின்றது எனலாம், 

இக்கற்களும் ,சியாறத்தை கண்காணித்து நிர்வகிப்பவர்களாலேயே பாதுகாக்கப்பட்டு வருகின்றது, இன்னுமொரு அம்சமாகும்.

#நாம் செய்ய வேண்டியது என்ன? 

சிங்கள மக்களை பெரும்பான்மையாக்க் கொண்டது மட்டுமல்ல, அவர்களின் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான வரலாற்றுப் பாரம்பரிய அம்சங்களைக்  கொண்ட இது போன்ற  இடங்களில் எம் முன்னோர் மக்களை  மார்க்க முறைப்படி வாழ்வதற்கு பணிபுரிந்து  மட்டுமல்ல, இன்றைய இருப்பிலும் ,இன உறவிலும், இப்பிரதேச மக்களின் பாதுகாப்பிலும், அன்று தொடக்கம் ,இன்றுவரை பணி புரிந்து கொண்டிருக்கின்றார்கள் இது போன்ற   எம் முஸ்லிம் முன்னோரின் பங்களிப்பை பாராட்டி ,புகழ்வதோடு 

மட்டும் நின்று விடாது,, அதனை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் #வரலாற்று_ஆதாரச்_சான்றுகளாக  பாதுகாக்க வேண்டிய கட்டாய கடமை ,இப்பிரதேச மக்களுக்கு மட்டுமல்ல இலங்கை முஸ்லிம் இருப்பை நிறுவ முனையும் எம்  அனைவரையும் சார்ந்த்தாகும்.

MUFIZAL ABOOBUCKER,
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA

7 கருத்துரைகள்:

இவை முஸ்லீம்களின் முக்கியமான சான்றுகள் நிச்சயம் பாதுகாக்கப்படுவது முஸ்லீம்களின் கடமை சில அறிவில்லா ஜீவன்களுக்கு இது விளங்காது,

Chetthaan (Sheitthaan) Thowkaaran

பயனுள்ள ஆக்கம். கவலை என்னவென்றால் இவ்வாறான எமது வரலாறு கூறும் பல ஸியாரங்கள் ஸிர்க் என்ற பெயரில் பல இடங்களில் அழிக்கப்பட்டு வரலாறு அற்ற சமூகமாக மாறி வருகின்றோம். இவ்வாறான வரலாறு கூறும் ஸியாரங்கள் பாதுகாக்கப்படவேண்டும். SLTJ போன்ற ஸியாரங்யகளை அழிக்ழிகும் கடும் போக்கு தீவிரவாத இயக்கங்கள் அழித்தொழிக்கப்பட்டு எமது வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும்.

கட்டுக்கெலியாவை கிராமத்தின் வரலாற்றுப் பின்னணியும் இப்பிரதேசத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் பரவல் தொடர்பாக அரும் பணியாற்றிய பெருந்தகை பற்றியும் ஆய்வு ரீதியான வரலாற்றுப் பின்னணியை வழங்கிய விரிவுரையாளருக்கு எனது நன்றிகள். ஜசாகல்லாகு ஹைரன்.

Dear Brothers...

While there are proofs for more than 1000 years of living of Muslims in Srilanka.. Why trying to highlight this grave.

May Allah Reward Jannah for whomever berried in this grave. BUT to call a person "AWALIYA of ALLAH"... Did any one of us get WAHEE to confirm That this person is FRIEND OF ALLAH? Definitely After Rasoolullah there is no one to bring the message of Allah to us and to confirm such and such is Kaleel of Allah. If that is the case,,, Who informed us such and such is an Awliya of Allah?????.. Fear Allah.

Further there are so many sahaaba, tabieen and atbaut tabieen lived after rasoolullah.. they did not call any bodies grave to be grave of Awliya, unless it was informed by Rasoolullah.

Further.. Going to grave is permissable for the sake conveying salam to the people of graves. Make Dua for their forgivness from Allah from anyhwere... BUT asking DUA from them and Considering them to be intercessors between you and Allah is completely wrong as you do not know whether this person is given permission to intercede for you by Allah (this is ilm ul haib) only Allah knows it.

Making DUA is an act of IBAADA, It should directly only to Allah alone. If you do this expect it from any body else, is SHIRK ( making him equal to Allah).

IF you say Protecting places of SHIRK will keep you History... Can you tell my WHY Prophet (sal) Destoryed the IDLES inside the KABA, which were connected to the history of Makkan Kuraish long before the birth of Rasoolullah.


Already we Srilankan Muslims have many proofs for our history in Srilanka.. BUT Did this protect us from past racial violence??

STAY Away from protecting places of SHIRK,,, Keep your trust in ALLAH alone and direct you acts not to anger him but to make him happy.. HE will protect you and enter you into jannah.

If you love to protect this places of SHIRK,,, fear Allah.. If any body going to commit SHIRK in this place... part of this sin will be added to your meazan and Allah will question you for this seriously on the day of JUDGEMENT day.

May Allah Protect us from making equal partners to Allah.

I endorse Bro Abdul Rasheed's explanation. Associating partners with Allah (swt) is a reprehensible sin.

Post a Comment