Header Ads



காத்தான்குடியில் இதை, தடுக்கப்போவது யார்...?

கடந்த சில மாதங்களுக்குள் எமதூரில் தூக்கில் தொங்கியும்,தீயில் கருகியும் என்று மூன்று ஜனாஸாக்களை மனநோயாளர்கள்யென பெயர் சூட்டப்பட்டு ஜனாஸாக்களை அடக்கம் செய்து விட்டு இருக்கிறோம்.

அந்த பட்டியலில் நேற்று -04- அஸர் தொழுகையின் பின் பாத்திமா றசீனா என்ற யுவதியின் ஜனாஸாவை அடக்கம் செய்தோம்.

இவ்வாறு அடக்கம் செய்த பாத்திமா றசீனா என்ற யுவதியின் வயது 36 மூன்று பிள்ளைகளின் தாய், தனக்கு தானே தீயை வைத்து எரிந்த நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டதாக அறியக்கிடைத்தது.
குறித்த ஜனாஸாவின் வீட்டுக்கு சம்பவம் நடைபெற்ற நேற்றைய முன்தினம் இரவு 09:30 மணியளவில் பார்க்க சென்றேன்.

ஜனாஸா எரிந்த நிலையில் அவ்வாரே கிடைந்தது.

நள்ளிரவின் பின்பே ஜனாஸா அவ்விடத்தில் இருந்து எடுக்கப்பட்டு சட்ட விடயங்களுக்காக கொண்டு செல்லப்பட்டு நேற்று அஸர் தொழுகையின் பின் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் சற்று விசாரித்தேன். தனக்கு தானே தீயை வைத்துக்கொண்ட றசீனாவின் வயது 36 அவர் மனநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியம் பெற்று வந்ததாக அறியக்கிடைத்தது. அவர் ஏன்? மனநோயால் பாதிக்கப்பட்டார்? 

இரண்டு வருடங்களுக்குள் மனநோய் பீடிக்க காரணம் என்ன?

என்று ஆராய்ந்தேன் சரியான விடைகிடைக்கவில்லை? அவர் மனநோயால் பாதிக்கப்பட்டு எத்தனை வருடம் என்று ஆராய்ந்தேன் இரண்டு வருடங்களுக்குள் இருக்குமென ஆரம்ப கட்ட தகவல் கிடைத்தது,

இது எனக்கு அப்பால் பட்ட விடயமாகும்.காரணம் நான் ஒரு ஊடகவியளாளர் கிடையாது, பொது நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் கிடையாது, மரணித்த குடும்ப உறுப்பினர் கிடையாது,

ஆனாலும் மரணித்த சகோதரியின் ஜனாஸாவில் நேற்று கலந்து கொண்டு அடக்கம் செய்து விட்டு வீட்டில் இரவு தூங்கும் போது அந்த சகோதரியின் ஜனாஸா கண்ணுக்குள் வந்தது. சற்று ஆராய்ந்தேன். இது தொடர்பாக எமது உள்ளூர் ஊடகங்களில் ஏதாவது செய்திகள் வந்துள்ளதாயென ஆராய்ந்தேன்.

ஜனாஸா செய்தி அடக்கம், நேரம் மாத்திரம் குறுஞ்செய்தியாளரால் குறுஞ்செய்தியாக மாத்திரம் வந்துள்ளதே தவிர இது தொடர்பாக எந்த ஒரு ஊடகவியலாளரும் செய்தியை ஒரு செய்தியாக கூட பதிவிட்டதாக இதுவரை தெரியவில்லை.

ஒரு பிரபான்டமான ஊரில்,  பல ஊடக அமைப்பு வலயமைப்பு உள்ள ஊரில், இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தில் அங்கம் வகிக்கும் ஊடகவியாளர்கள் உள்ள ஊரில், ஒரு இளம் யுவதி தனக்குத்தானே தீயை வைத்து கொள்வதுயென்பது எவ்வளவு பாரதூரமான செயல்?

இந்த விடயம் எதனால் ஏற்பட்டுள்ளது? இதன் பாரதூரம் என்ன? இவ்வாறு மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தீர்வு என்ன? இவ்வாறு தொடரும் மனநோய் மரணம்களுக்கு பிரதான காரணம் என்ன? இன்று றசீனா இந்த நிலைக்கு யார் பொறுப்பு?

இதுவல்லவா ஒரு ஊடகவியலாளர் ஆய்வு செய்து செய்தி வெளியிட வேண்டும்?

இந்த விடயத்தை ஒரு செய்தியாக போட கூட மனம் இல்லாத உள்ளூர் ஊடகவியலாளர்கள் இந்த மரணத்தின் பாரதூரத்தை எவ்வாறு புரிந்துகொள்ளப்போகின்றார்கள்.

ஒரு ஊடகவியலாளரின் சகோதரிக்கு இந்த நிலை ஏற்பட்டால் இந்த நேரம் என்ன செய்திருப்பார்கள் ? ஒரு ஊடகவியலாளரை தொலைபேசியில் அச்சுறுத்தினார் என்பதற்கு ஊரை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் ஏன்? இந்த விடயத்தை ஒரு செய்தியாக கூட பதிவிட வில்லை,

நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பிஸியாக கூட அவர்களுக்கு இருக்கலாம் நிகழ்வுகளில் கலந்துகொள்வது முந்திக்கொண்டு புகைப்படம் எடுத்து செய்தியாக பதிவிடுவது அதை கொப்பி பன்னி மற்றைய ஊடகவியளார்கள் பதிவிடுவது இதுதான் எமதூர் ஊடகவியலாளர்களின் ஊடகப்பணியாக உள்ளது.

ஒர்,இருவர் சமூக அக்கறை கொண்ட ஊடகவியலாளராக இருந்தாலும் அவர்களால் சிலவற்றை எழுத  முடியாமலும் உள்ளது, நடைபெறும் ஊடக செயல் அமர்வுகளில் இதை ஊடகவியலாளர்களுக்கு படித்து கொடுப்பதும் கிடையாது.

ஒரு கொலை,அல்லது விபத்து, அல்லது மரணம், போன்ற விடயம் நடைபெற்றால் அதை செய்தியாக போடுவது மாத்திரமல்ல ஊடகப்பணி, ஒரு சம்பவம் நடைபெற்றால் அதன்பின்னனிகள்
அதன்பாரதூரம்,அதற்கான தடயங்கள்,சாட்சியங்களை முன்கொண்டு வருவதே ஊடகப்பணி…

இதைத்தான் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரம தொடக்கம் பிரதீப் எகலியகொட வரை செய்தார்கள்.

இவ்வாரான விடயத்தில் ஈடுபட்டால் ஊடகவியலாளர்கள் மரணத்தை கூட எதிர்கொள்ள வேண்டி வரும் அவ்வாறு நீங்கள் மரணத்தை எதிர்கொண்டால் அதற்கு பெயர் மரணம் என்பதை விட இந்த சமூகம் உங்களை சஹீதான மரணமாக பார்க்கும்.

வெளியூர்களுக்கு ஊடகப் களப்பயணம் மேற்கொள்ளும் ஊடகவியலாளர்கள் ஒரு முறை ஊருக்குள் களப்பயணம் விஜயம் செய்து பார்த்தால் ஊரில் உள்ள எத்தனையோ மனநோயளர்களை கண்டு பிடிக்க முடியும்.

மன்னிக்கவும் அவர்களால் அது முடியாது… காரணம் எமதூரில் ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் உள்ள 90% வீதமான ஊடகவியளாலர்கள் அரச துரையில் கடமை புரியும் அரச உத்தியோகத்தர்கள் ஆகையால் ஒரு எல்லையை தாண்டி அவர்களால் வர முடியாமல் உள்ளது 
என்பது கசப்பான உண்மையாகும்.

இது எந்தவொரு ஊடகவியலாளரின் தனிப்பட்ட விருப்பு,வெருப்புக்கு அப்பாலான பதிவாகும்.

முஹம்மட் பர்சாத் 
காத்தான்குடி,

No comments

Powered by Blogger.