Header Ads



மைத்திரிபாலவுக்கு மீண்டும், வெற்றி பெற முடியாது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்குவதை தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் குமார வெல்கம இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதை நான் எதிர்க்கின்றேன். சிறிசேனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது.

இரண்டு மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் பற்றி கூறியிருந்தனர். அவர்கள் மைத்திரிபால சிறிசேன பற்றி கூறவில்லை. இதனால், மற்றுமொருவரை வீழ்த்த முயற்சிக்கின்றனரே என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. நான் பெயர் விபரங்களை கூற மாட்டேன்.

மகிந்தவுக்கு செய்ததை போல் செய்வதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனரோ தெரியவில்லை. அதில் எனக்கு பெரிய சந்தேகம் உள்ளது. மேல் நோக்கி செல்லும் நபரை இழுத்து கீழ் தள்ள முயற்சிக்கின்றனர்.

அப்படி நடக்காலம் என்று எனது தூரநோக்கி சிந்தனை சொல்கிறது. மகிந்த சமரசிங்க போன்றவர்கள் சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சொல்கின்றனர்.

அதே கட்சியை சேர்ந்த ஆளுநர் கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதில் ஏதே பெரிய சதி இருக்கின்றது. மகிந்தவுக்கு செய்ததை மற்றவர்களுக்கு செய்ய போகிறார்களோ தெரியவில்லை” என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.