Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை பெயரிட, கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிட கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் திலீப் வெதஹாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -17- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையின் பிரகாரம், தேர்தல் ஒன்றுவருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. அது நாடாளுமன்றத்தில் தேர்தலா அல்லது மாகாண சபைத் தேர்தலா அன்றி ஜனாதிபதி தேர்தலா என்பது தொடர்பில் இன்னமும் முடிவாகவில்லை.

ஆனால், முதலில் நாடாளுமன்றத்தேர்தல் வரவேண்டும் என்கின்றனர் மகிந்த தரப்பினர். இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த தரப்பின் அவர் சகோதர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தான் தேர்தலில் களமிறங்கத் தயார் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், சமல் ராஜபக்சவும் தேர்தலில் தான் போட்டியிடத் தயார் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவோ இது தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் இப்போது வரை வெளியிடவில்லை.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன. முன்னாள் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்காராவை ஐக்கிய தேசியக் கட்சி களத்தில் இறக்கும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால், அது தவறான கருத்து என மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அமைச்சர் திலீப் வெதஹாராச்சியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் வழங்கிய அவர், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிட கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரெடி என்று அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கினால் அடுத்த பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. யு. என்.பீ யின் தெரிவு இதுவாக
    இருந்தால் அது புத்திசாலித்தனமானதும்பெரும்பாலான நாட்டு
    மக்களின் அபிமானமாகவும் இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.