Header Ads



கிழக்கின் புதிய ஆளுநருக்கு, அக்கரைப்பற்றிலிருந்து ஒரு மடல்...!


இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஒரு முஸ்லிம் ஆளுணராக கிழக்கை அலங்கரிக்க இருக்கும் உங்களை முதலில் வாழ்த்தியவனாகவும், உங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டவனாகவும்,

பெரும்பாண்மை இனமாக முஸ்லீம்களைக் கொண்ட இந்தக் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், தலைமைகள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் இருந்தபோதும் இதுவரைக்கும் அவர்களால் நிறைவேற்றப்படாத பல திட்டங்கள் இருக்கின்றன. மக்களிடமருந்து அநீதியான முறையில் பறிக்கப்பட்ட உரிமைகளும் உடமைகளும் உள்ளன. இதனை எந்த அரசியல்வாதியும் இதுவரை தீர்த்து வைத்ததில்லை. இனியும் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.

மூன்று இனமும் சுமூகமாக வாழும் இந்த மாகாணத்தில் இனவாத கருத்துக்களையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டு இனங்களுக்கிடையில் சுமூகமற்ற உறவை ஏற்படுத்தி தங்களில் அரசியல் இலாபத்திற்காக செயற்படும் அற்ப அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். இதனால் அனைத்து இனமக்களும் துன்பமடைந்திருக்கிறார்கள். ஆகவே இருக்கும் அரசியல்வாதிகளைத் தவிர்த்து புதிய ஆளுணராக பதவியேற்றிருக்கும் உங்களிடம் இவற்றை உடனுக்குடன் தீர்த்து வைக்க கேட்டுக்கொள்கிறேன்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இதுவரை மக்களிடம் கையளிப்படாமல் நுரைச்சோலை வீடமைப்புத் திட்டம், இதுவரை தீர்க்கப்படாத அக்கரைப்பற்று வட்டமடு விவசாய காணிப் பிரச்சினை, இதுவரை தீர்வு கொடுக்கப்படாத அக்கரைப்பற்று நுரைச்சோலை வேளாண்மைக் காணிப்பிரச்சினை, ஒலுவில் துறைமுகத்தினால் ஒலுவில் பாலமுனை பிரதேச மக்களுக்கு ஏற்படும் மண்ணரிப்பு பிரச்சினை,

பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகாலமாக காணப்படும் குடிநீர்ப் பிரச்சினை, இறக்காமம் பிரதேசத்தில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட மாயக்கல்லி சிலைப் பிரச்சினை, சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட அபகரிக்கப்பட்ட காணிப்பிரச்சினை, ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேச காணிப் பிரச்சினை என்று அடுக்கிக்கொண்டே செல்லமுடியும். அம்பாறை மாவட்டத்தில் 43 வீதமிருக்கும் முஸ்லிம்களின் கையில் 12 வீதமான நிலம் மட்டுமே இருக்கும் ஒரு துயரை யாரும் அறியாமலில்லை. அப்படியாக திட்டமிட்டு வேண்டிமென்றே பல்லாயிரக்கணக்கான காணிகள் எம்மக்களிடமிருந்து அரசியல்வாதிகளால் காலாகாலமாக பறிக்கப்பட்ட அநீதிகளும் உண்டு.

எனவே மக்கள் நம்பிக்கையிழந்த அரசியல்வாதிகளினால் தீர்த்து வைக்கப்படாத இந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு இந்த மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்றிருக்கும் உங்களிடம், எம் சமூகத்தை நேசிக்ககூடிய உங்களிடம் ஒரு கிழக்கு மாகாணத்தவனாய் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு உங்கள் அதிகாரத்திற்குட்பட்ட காலத்தில் இப்பிரச்சினைகளை நீங்கள் தீர்த்து வைத்து மக்களின் உரிமைகளை மீட்டுக் கொடுத்தீர்களேயானால் நிச்சயமாக இந்தக் கிழக்கு மாகாணம் உங்களை எப்போதும் மறக்காது.

அஷ்ரப்
அக்கரைப்பற்று. 

11 comments:

  1. இன்னும் பத்து மாசம் தான் ஜனாதிபதியும் பதவியில் இருப்பார். பிறகு நீங்களும் மாற தான் போகிண்றீர்கல். அதுக்குலே ஏன் இந்த நப்பாசை உங்களுக்கு.

    ReplyDelete
  2. இன்சா அல்லாஹ். அல்லாஹ்விடம் பாரத்தைப் போட்டு முடிக்கும் பணியினை ஹிஸ்புல்லாஹ் அவர்களிடம் கொடுப்போம்.

    ReplyDelete
  3. Eastem provincial tamil
    Prepaya to move to india
    Or jaffna he going to revengender
    Tamil

    ReplyDelete
  4. என்ன அனுசாத், கொஞ்ச நாளா ஆளையே கானோம். ஒரு முஸ்பாத்தியும் இல்லாமல் போச்சு.

    ReplyDelete
  5. பயங்கரவாதிகளுக்கு அஞ்சாது, உங்களுடைய இந்த பொறுப்பால் முஸ்லிம் சமூகத்திற்கு செய்ய வேண்டியதை உடனடியாக செய்து முடிங்கள்

    ReplyDelete
  6. Hizbullah can deliver and achieve within one year. No need 5 years. We wish all success.

    ReplyDelete
  7. Hizbullah can deliver and achieve within one year. No need 5 years. We wish him all success.

    ReplyDelete
  8. மிஸ்டர் அனுசாத்,

    பத்து மாதங்கள் என்பதும் நீண்ட காலம்தான். ஹிஸ்புல்லாஹ் ஆமை போன்றிருக்கும் அரசியல்வாதியா ஆளுனரோ அல்ல. தன்னால் முடிந்ததை விரைவாக செய்து முடிக்கக்கூடிய திறமை கொண்டவர்.

    உங்களால் இப்போதைக்கு முடிந்த அனைத்து இனவாதங்களையும் இவருக்கு எதிராக கக்குங்கள், கூடவே அவருக்கெதிரான கிழக்கின் பலம்மிக்க அனைத்து கட்சிகளையும் துணைக்கழைத்துக் கொள்ளுங்கள். அனைத்து எதிர்ப்பிற்கு மத்தியிலும் சாதித்துக் காட்டுவார் இறைவன் நாடினால்.

    ReplyDelete
  9. இது கிழக்கில் ISIS வளர உதவும் என்பதால் இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி

    ReplyDelete
  10. அஜன் அண்ணா, எப்பிடி சௌக்கியமா? எப்பவுமே ஈனோ புள் பண்டல் ஸ்டொக் வெச்சிக்கங்க அண்ணா, அதுக்கும் நெஞ்செரிவு நிக்கலன்னா கொஞ்சமா ஆசிட் வாங்கி குடிச்சி பாருங்க அண்ணா, நிலைமை எல்லாம் சரியா வந்திடும்.

    கொஞ்ச நாளைக்கு இந்த மாதிரி ட்ரீட்மென்ட்ட கொண்டு போவோம் சரியா... இந்த முறை இப்பிடி செஞ்சி பார்ப்போம்.... சரியா அண்ணே. பாய் பாய் அச்சா டீக்கே...

    ReplyDelete

Powered by Blogger.