Header Ads



வாய்களை மூடவைக்க, ஜனாதிபதி தீர்மானம்...?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை ஜனாதிபதி ஆக்கியவர்களை காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்பட்டமையினால் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மைத்திரிக்கும் இடையில் தீவிர மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

மைத்திரியின் செயற்பாடுகளுக்கு எதிராக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரபலங்கள் சிலர் ராஜபக்சர்களின் செயற்பாடுகளை விமர்சனம் செய்துள்ளனர்.

ராஜபக்சர்களை பாவம் பார்த்தமையினாலேயே அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை பாதுகாக்கப்பட்டதாக குறித்த பிரபலங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களினால் கோபமடைந்த மைத்திரி, தாமரை மொட்டு கட்சியில் இணைந்தவர்கள் தொடர்பில் மீண்டும் பேசுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தாமரை மொட்டு கட்சி இணைந்து புதிய முன்னணி ஒன்றை உருவாக்கி, ஜனாதிபதி வேட்பாளராகும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாகவே தாமரை மொட்டு கட்சிக்கு எதிரான சுதந்திர கட்சி உறுப்பினர்களின் வாய்களை அடைப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மைத்திரி மற்றும் சந்திரிக்கா தரப்பினர்களுக்கு இடையில் மோதல் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

சந்திரிக்காவுக்கு ஆதரவு வழங்கும் கட்சி விரைவில் ஜனாதிபதிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.