Header Ads



அமெரிக்க சிட்டிசன் பற்றி எந்த சிக்கலும் இல்லை -ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தாம் தயாராகவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார்.

விஷேட மேல்நீதிமன்றில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு இந்த கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“தனது அமெரிக்க குடியுரிமை தொடர்பில் எந்த சிக்கல்களும் இல்லை. தாம் விரும்பினால் அதனை கைவிடுவதற்கான இயலுமை தமக்கு இருக்கின்றது. அது தொடர்பில் அமெரிக்கா எந்த நிர்ப்பந்தங்களையும் ஏற்படுத்த முடியாதெனவும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் தயார் என்றால் தானும் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்று மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. பொய்மூட்டை,அப்பட்டமாக பொய் சொல்லத் தொடங்கிவிட்டான்.அமெரிக்க பிரஜைகளுக்கு வேறு எந்தவொரு நாட்டிலும் தேர்தலில் போட்டியிட முடியாது. அது மாகாணசபை தேர்தலாக இருந்தாலும் சரியே. அந்த சட்டநெறியை Constitutions of USA மிகத் தௌிவாகக் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.