Header Ads



புதிய யாப்பு வேண்டாம் - ஓர் இனத்தை பகைத்து, ஒரு தரப்பு உரிமைகள் பெற்றால் குரோதம் வளரும்

இந்த பாராளுமன்றத்தில் புதிய யாப்பு முன்வைக்க வேண்டாம். ஓர் இனத்தை பகைத்துக் கொண்டு மற்றொரு தரப்பு மாத்திரம் உரிமைகள் பெற முயல்வதால் குரோதம் தான் வளரும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் தரப்பினரை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் நிராகரித்தார்கள். பொதுத் தேர்தலுக்கு செல்வோம். அதன் போது நாம் எமது அரசியலமைப்பு யோசனையை முன்வைக்கிறோம். ஐ.தே.க தமது யோசனையை முன்வைக்கட்டும். மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு சபை விவாதத்தில் உரையாற்றிய அவர் , நிபுணர் குழுவின் அறிக்கையையன்றி வழிநடத்தல் குழுவின் அறிக்கையே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும். இன்று வழங்கிய அறிக்கை தொடர்பில் இன்றே விவாதிக்க முடியாது. அதனை ஆராய கால அவகாசம் தேவை. இந்த அறிக்கையில் என்ன உள்ளது என எமக்குத் தெரியாது. இந்த பாராளுமன்றம் முறையானதா என்பது தொடர்பில் சிக்கல் உள்ளது.துண்டு துண்டாக யாப்பு திருத்தப்பட்டதால் அரசியலமைப்பு நாசமாகியுள்ளது.முழுமையான யாப்பு தான் அவசியம்.

புதிய அரசியலமைப்பு கொண்டுவர முயலும் சகல கட்சிகளும் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தன.ஓர் இனத்தை பகைத்துக் கொண்டு மற்றொரு தரப்பு மாத்திரம் உரிமைகள் பெற முயல்வதால் குரோதம் தான் வளரும். அரசியல் ரீதியில் குரோதம் ஏற்படுத்தாதீர்கள் என்று கோருகிறோம்.

மக்கள் ஆணையை மதித்து செயற்பட வேண்டும்.புதிய யாப்பு கொண்டுவரும் பாராளுமன்றம் முறையானதாக இருக்க வேண்டும். புதிய யாப்பு கொண்டுவரும் அரசு முறையானதாக இருக்க வேண்டும். அரசு அந்த நிலையில் உள்ளதா என சந்தேகம் உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள்.19 ஆவது திருத்தத்தை நீதிமன்றம் விமர்சித்துள்ளது. தேவையில்லாத சரத்துகள் இதில் உள்ளன. இதனால் உச்ச நீதிமன்றத்திற்கு தலைசாய்க்க பாராளுமன்றத்திற்கு நேரிட்டது. அவசரப்பட்டே திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.19 ஆவது திருத்தம் கொண்டுவந்த போது நான் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை.

பொதுத் தேர்தலுக்கு ​செல்வோம். நாம் எமது அரசியலமைப்பு யோசனையை முன்வைக்கிறோம். ஐ.தே.க தமது யோசனையை முன்வைக்கட்டும் .மக்கள் எதனை அனுமதிக்கிறார்கள் என்று பார்ப்போம். அடுத்த பாராளுமன்றத்தில் புதிய யாப்பை முன்வைக்கலாம்.இந்த பாராளுமன்றத்திற்கு புதிய யாப்பு முன்வைக்க வேண்டாம். இது முறையற்ற பாராளுமன்றம்.

4 comments:

  1. Constitutional reform in any form if a bit of benefits or privilege given to minorities
    MR and his communal group create a big issue to win the elections. From the day of independence same thing happened. Even progressive or the fair politicians can not support as it will be major issue put forward by MR .
    This what MR wants to get Buddhist support. What is the history of Rev Ganasara
    Who was supported natured him ? When he easwas punished by courts
    Where are the leaders of Singha Le Singhala Ravaya etc.who is getting support of these groups

    ReplyDelete
  2. ஒரு இனத்தை பகைத்து மற்றொரு இனம் உரிமைகள் பெறுவதென்பது
    தவிர்க்கப்படவேண்டுமென நீங்கள் குறிப்பிடுவது நியாயமானதே.
    ஏனெனில் இன்று ஒரு இனத்தை பகைத்துக்
    கொண்டு மற்றுமொரு இனம் அபார உரிமைகளை தொடர்ந்து பெற்றுக்கொண்டுவருகிறது.என்பதை
    உலகம் அறியும். எனவே தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியல் அமைப்பு சட்டத்திற்கு தங்கள்
    அமைப்பு சார்பாக போதிய கருத்துக்களையும், திருத்தங்களையும்
    வழங்கி இந்தநாட்டிலே வாழ்கின்ற எல்லா இனங்களும் ஒன்றை ஒன்று
    பகைத்துக்கொள்ளாமல் ஒற்றுமையாக
    சம அரசியல் உரிமைகள் பெற்ற சமூகங்களாக வாழ்வதற்கான சந்தர்பத்தை இதன்மூலம் வழங்க ஏன்
    நீங்களும் உங்களை சார்ந்தவர்களும்
    முயற்சிக்காமல் பொய்களையும் கற்பனைகளையும் மக்கள் மத்தியில்
    பரப்பி ஏன் அரசியல் இலாபம் தேடுகின்றீர்கள்?மீண்டும் அரசியல் அதிகாரத்தை பெறவா? அவ்வாறெனின் நீங்கள் முன் எடுக்கும்
    இச்செயற்பாடுக்கு இந்த நாட்டிலே உள்ள நாட்டை நேசிக்கும் அரசியல்
    வாதிகள் புத்தி ஜீவிகள்,சமயத்தலவைர்கள், படித்தவர்கள் பாமரமக்கள் போன்ற
    வர்களின் ஆதரவு உங்களுக்கு இல்லாமல் போகும் என்பதை மறுதலிக்கமுடியாது.மாறாக இந்த நாட்டை நேசிக்காத இனவாதிகளும்
    சுய நல வாதிகளும் ஊழல்வாதிகளும்
    நீதி நியாயம் நேர்மயைற்றவர்களுமே
    உங்களை ஆதரிப்பார்கள் !இது எந்த அளவுக்கு வழிநடாத்தி உங்களை வெற்றி பெறச்யெய்யும் என்பதை பொறித்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த உத்தேச அரசில் சட்ட
    வரைபில் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் தாம் விரும்பிய திருத்தங்களையும் முன்மொழிவுகளையும் வழங்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை
    வழங்கி நிறைவேற்றலாம் அல்லது நிராகரிக்கலாம். எனவே இதுவொரு
    கூட்டுப்பொறுப்பான விடயம் .ஆகவே
    இதில் யாரும் யார்மீதும் பழி போட
    வேண்டிய அவசியமில்லை. ஆனால்
    இந்தநாட்டிலே எல்லாமக்களுக்கும் சம
    உரிமைகள்,அதிகார பரவலாக்கல்கள்
    இல்லை என்பது உண்மை .எனவே இச்சந்தர்ப்பத்தை வெறுமனே அரசியல் இலாபத்துக்காக தட்டிக்களிக்கால் நாட்டுக்கும் ,எல்லாமக்களுக்கும்நலம்
    பெறுகின்ற ஒருஆவணமாக உருவாக்க
    ஒத்துளைக்குமாறு எல்லா எம்பி மார்களையும் எம்போன்றவர்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

    ReplyDelete
  3. மற்ற இரு இனங்களுக்கும் அநீதி இழைத்துவிட்டு தமிழர்களுக்கு மட்டும் எப்படி நீதி வேண்டுகிறார்கள்? இலங்கைக்கு இன்னொரு அரசியலமைப்பு தேவையற்றது.

    ReplyDelete
  4. Where is Noor Nizam's (MV) comments on this news

    ReplyDelete

Powered by Blogger.