Header Ads



இன்று விசேட அமைச்சரவைப் பத்திரத்தில், கையொப்பமிட்ட ஜனாதிபதி

அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் உடனடியாக நடத்த அமைச்சரவையின் அனுமதியை கோரும் விசேட அமைச்சரவைப் பத்திரம் 

ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரி...

இந்த அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ள அவர் அடுத்த அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை கூடும்போது இதனை முன்வைக்கவுள்ளார்..

ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் நிராகரிக்கப்படும் வாய்ப்பு இல்லாதபடியால் அதன் பின்னர் மாகாண சபை தேர்தல் ஒன்றுக்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்..

ஏற்கனவே ஆறு மாகாணசபைகளின் ஆயுட்காலம் முடிந்து அங்கு ஆளுநரின் ஆட்சி நடைபெறுகிறது. தென் மாகாணசபையின் ஆயுட்காலம் ஏப்ரல் 10 ஆம் திகதியும் ,மேல் மாகாணசபையின் ஆயுட்காலம் ஏப்ரல் 21 ஆம் திகதியும் ,ஊவா மாகாணசபையின் ஆயுட்காலம் செப்டெம்பர் 8 ஆம் திகதியும் முடிகின்றன..

முன்கூட்டியே அவற்றை கலைத்து ஒரே தினத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்றே ஜனாதிபதி அமைச்சரவையில் கோரவுள்ளார்...

மாகாண சபைத் தேர்தல் ஒன்றினை நடத்தி அதில் அமோக வெற்றி கிடைத்தால் அடுத்து உடனடியாக ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதே மைத்திரியின் இலக்கென்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்..!

-sivaraja-

No comments

Powered by Blogger.