Header Ads



இன்று அமைச்சர்களாக இருப்பவர்களும், ஆளுநராக இருப்பவரும் முஸ்லிம்கள் - கருணா

அரசியல் மாற்றம் தமிழ் மக்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய காரணம் என்றும் கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தினை உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலிருந்து பிரிப்பதற்கு எடுத்துவரும் முயற்சியைக் கைவிடுமாறு கோரி விவசாயிகளால் செங்கலடி நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இன்று அமைச்சர்களாக இருப்பவர்கள் அனைவரும் முஸ்லிம்கள், ஆளுநராக இருப்பவரும் முஸ்லிம். இதற்கு முழுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைதான் குற்றம் சாட்ட வேண்டும்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் வெளிப்படையான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தை குழித் தோண்டி புதைத்து விட்டு இன்று அமைதியாக இருக்கின்றார்கள் என்றும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இரா.சம்பந்தனுக்கு எதிராக பேச உமக்கு அருகதை இல்லை என கருணாவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கூறினார்.

அத்துடன், யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன பதில், நான் அவர்களின் உறவுகளை கொண்டு உமக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் எனவும் அவர் இதன் போது எச்சரித்து பேசினார்.

5 comments:

  1. Ohhh avanaaaa ivan....?

    ReplyDelete
  2. Ivanai pesa vittathe prum thavaru.....Ithula aarrppaattam verayaakkum ivanukk...!
    Kolakaara paavi

    ReplyDelete
  3. உண்மையிலேயே ஹிஸ்புல்லாவை விட கருணா அம்மடானுக்குத்தான் ஆளுனர் பதவி பொருத்தமானது. அல்லது அமைச்சர் பதவி பொருத்தமானது. ஏனெனில்அவர் தான் பிரதி அமைச்சராகப் பதவி வகித்த காலத்திரல் தன்னுடைய இலட்சியங்கள் நோக்கங்கள் எதனையும் நிறைவேற்றவில்ழைல. காரணம் எந்த வகையிரல் கிழக்கில் மீதமுள்ள முஸ்லிம்களை கொன்றொழிக்கலாம் என்று திட்டமிடுதலிலே கழிந்து விட்டது. எனவே மீண்டும் பொறுப்பான பாதுகாப்பு அமைச்சர் போன்ற பதவிகளைக் கொடுக்கின்றபோது அவரது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக இருக்கும். மற்றும் காத்தான்குடி மற்றும் ஏறாவுர் பிரதேசங்களிலும் நடாத்திய வீர விளையாட்டுகளுக்கு பீப்பந்து விழாவும் இதுவரை நடாத்தப்படவில்லை.

    ReplyDelete
  4. In Sha Allah ,this culprit's dream never come to true, but people are waiting to teach lesson for killing of Kaathannkudy , eravur and other area innocent people. count the day idiot culprit

    ReplyDelete
  5. neenga pesala mr...ungala pesa waikkuranuwo..ungala konjam kannadila paarungo...appo puriyum..iwanellaam pesuraanuwo...

    ReplyDelete

Powered by Blogger.