Header Ads



எதிர்கட்சி தலைவர் பதவி, எனக்கு வேண்டாம்

ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணியின்  மூத்த உறுப்பினர்களிலுள் ஒருவரான களுத்துறை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமர்று சபாநாயகருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின்  பாதுகாப்பு ஒருங்கினைப்பு  எழுத்து  மூலமாக  கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தான் ஒருபோதும் எதிர்கட்சி தலைவர்  பதவியை பொறுப்பேற்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பிரதான எதிர்கட்சி தலைவர்  பதவியை  குமார வெல்கமவிற்கு  வழங்குமாறு    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  பாதுகாப்பு இயக்கத்தின்  ஒருங்கினைப்பாளர்  சபாநாயகருக்கு  விடுத்துள்ள கோரிக்கை  தொடர்பில் வினவிய போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சம்பந்தனை தவிர்த்து  எதிர்கட்சி தலைவர் பதவியை  பிறிதொருவருக்கு வழங்க சபாநாயகர் தீர்மானித்தால் அப்போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு அப்பதவியை வழங்குங்கள் என்று  நான் மும்மொழிவேன்.  ஏனெனில் மஹிந்த ராஜபக்ஷ சிறந்த அரசியல்  தலைவர் . இவர் கடந்த காலங்களில் ஒரு சிலரின் அரசியல் சூழ்ச்சிக்கு  இணங்கியமையே  பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தியது . எவ்வாறு இருப்பினும் ஒருபேர்தும்  ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியை விட்டும், மஹிந்த ராஜபக்ஷவை விட்டும் விலக மாட்டேன் என்றார்.

No comments

Powered by Blogger.