Header Ads



பௌத்த தேரரின் உலமாக்கள் மீதான, தாக்குதலை கண்டிக்க வேண்டும்

- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் -

ஒவ்வொரு மதத்திற்கும் மதத் தலைவர்கள் இருக்கின்றனர் அந்தந்த மதத்தை பின்பற்றுவர்கள் மதத் தலைவர்களுக்கு உரிய கௌரவம் அளித்து வருகின்றனர். இஸ்லாமிய மக்களாகிய நமது மதத் தலைவர்களாக நாங்கள் மௌலவிமார்களை அல்லது உலமாக்களை ஏற்றுக்கொண்டுள்ளோம் எங்களுக்குள்ளே சிறிய சிறிய பிரிவுகள் இருந்தாலும் அது ஏனைய மதத்தைச் சார்ந்தவர்கள் பின்பற்றுவது போல் பாரிய பிளவுகளை கொண்டதல்ல. நாங்கள் ஏனைய மதத்தலைவர்களை மிகவும் கௌரவமாக அழைப்பது போல் ஏனைய மதத்தலைவர்களும் நமது மௌலவிமார்களையும் உலமாக்களையும் மிகவும் கௌரவமாக அழைப்பதே மரபு.

அண்மையில் முஸ்லீம் சமூகத்தில் இருக்கும் ஒரு பிரிவினர் மத்திய மாகாணத்தில் இருக்கும் ஒரு பௌத்த தேரரை பேட்டி கண்டு அதனை சமூக வலைத்தளங்களிலும் ஏனைய தொடர்பு சாதனங்களிலும் பெரிதாக பரப்புகின்றனர். குறிப்பிட்ட தேரரை பேட்டி கண்டு இருப்பது பாராட்டப்படக் கூடிய ஒரு விடயம். ஆனால் இவ்வாறான பேட்டிகளை காணும்போது பேட்டி காணும் மத்தலைவர்களின் சமூக அந்தஸ்தையும் , அங்கீகாரத்தையும், தகுதியையும்  கருத்தில் கொள்ள வேண்டும்.

பௌத்த பீடங்களான அஸ்கிரிய, மல்வத்தை போன்ற பீடங்களின் மதத்தலைவர்கள்  பரவலாக அங்கீகரிக்கப்பட்ட  தலைவர்களாக உள்ளனர். இவர்களை பேட்டி கண்டிருந்தால்  பலரின் கவனத்தை இதைவிட ஈர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை.  குறுகிய காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் பிரபலமடைந்துள்ள குறிப்பிட்ட தேரர் எமது மதத்தலைவர்களை அப் பேட்டியின்போது மிகவும் தரக்குறைவாக பேசுகின்றார்.  .

எமது மௌலவிமார்கள் அல்லது உலமாக்கள் ஒரு சிலர் தவறுகளை செய்திருக்கலாம் அதற்காக ஒட்டுமொத்த மௌலவிமார்களையும் மிகவும் தரக்குறைவாக குறிப்பிட்ட தேரர் பேசுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு விடயமல்ல.அந்த பேட்டியில் உலமாக்களை 'அவன்'அல்லது அதற்கும் கீழான தரம் குறைந்த வார்த்தைகளை பிரயோகித்து தேரர்பேசுகின்றார்.ஒரு சாதாரண பொதுமகனைக் கூட மதத்தலைவர்கள் இவ்வாறு தரக்குறைவாக பேசுவது இல்லை. அவ்வாறு பேசுவது மதத் தலைவர்களுக்கு பொருத்தமானதல்ல .

குறிப்பிட்ட ஜமாத்தை அடிக்கடி  தேரர் பிழையாக சமூகத்துக்கு எடுத்துக் காட்டுவது என்ற ஒரே காரணத்திற்காக  பேட்டி காண சென்று எமது  உலமாக்களை தரக்குறைவாக பேசும்போது மௌனமாக அவர்கள் இருந்ததும் கண்டிக்கக் கூடிய விடயம.

உலமாக்களைப்பற்றி தேரர் கூறிய விடயங்களை ஒரு சில நமது மீடியாக்கள் கூட  பிரதான செய்தியாக குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆனால் அவமதித்து பேசுவதை பற்றி எந்த விதமான செய்திகளையும் கண்டனங்களையும் வெளியிடவில்லை .எனவே இது ஆற்றில் குளிக்கச் சென்று சேற்றைப் பூசிக் கொண்டு வருவது போன்ற ஒரு செயலாகும்.

இன்று கண்டியில் இருக்கும் ஒரு அரசியல்வாதியை நான் சந்தித்த போது அவர் கூறினார் அவரது தந்தை அவருக்கு கூறியிருக்கிறாராம் நாய் குரைத்தாலும் யானை மௌனமாக பாதையில் வீறுநடை போடுவதைப் போல்   இருக்கவேண்டும் என்று.

ஆகவே உலமாக்களை தரக்குறைவாக பேசியது பற்றி கண்டிப்பை நாங்கள் வெளிப்படுத்த வேண்டும் குறிப்பிட்ட தேரர் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவுடனும் ஒருசில மீடியாக்களின் ஆதரவுடனும் ஆசீர்வாதத்துடனும் பிரபலமாக காட்டப்பட்டாலும் பெரும்பான்மை இனத்தின் மத்தியில் அவர் பெரிதாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதத் தலைவர் அல்ல. அவரது பின்னணியையும் சமூக அந்தஸ்தையும்  தெரிந்துகொண்டு பேட்டிகாண சென்றிருந்தால் இவ்வாறான ஒரு நிகழ்வு நடப்பதை தவிர்த்திருக்கலாம்.

3 comments:

  1. Yes your 100%true brother

    ReplyDelete
  2. சமூகமாக ஒற்றுமையாக விட்டுக்கொடுப்புடன் வாழத் தெரியாதவர்களை மற்றவர்கள் திட்டுவார்கள்தான். ஏன் நம்மவர்கள் ஞானசார தேரர் அவர்களுக்கு பேசாத வார்த்தைகளை எல்லாம் இந்த தேரர் பேசி விட்டாரா?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.