Header Ads



சண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயாவுக்கு அனுமதி - போராடிய முஸ்லிம், ஆசிரியைகளுக்கு பாராட்டு

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து கொண்டு சென்ற 4 முஸ்லிம் ஆசிரியைகளுக்கு  பாடசாலை நிர்வாகம் ஆட்சேபணை தெரிவித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட முஸ்லிம் ஆசிரியைகள் கடந்த 9 மாதகாலமாக தற்காலிக இடமாற்றத்தில் இருந்து வந்துள்ள வேளை அதற்கான முறைப்பாட்டையும் மனித உரிமை ஆணைக்குழுவிடம் செய்திருந்தனர்.

மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைகள் முடிவுற்று அதற்கான மனித உரிமை ஆணையகத்தின் பரிந்துரைகள்  இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் நிலையில் தற்காலிக் இடமாற்றத்தல் இருந்த ஆசிரியர்களின் இடமாற்றக் காலக்கெடு சென்ற டிசம்பர் 31ம் திகதியோடு முடிவுற்ற நிலையில் மீண்டும் ஷண்முகா இந்துக் கல்லூரியில் இன்று -02- கடமை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியைகளான பாத்திமா பஹ்மிதா ரமீஸ்,சஜானா பாபு முஹம்மத் பசால்,சிபானா முஹம்மத் சபீஸ்,ரஜீனா ரோஷான் ஆகிய ஆசிரியைகள் இன்று ஹபாயாவோடு ஷண்முகா இந்துக் கல்லூரியில் மீண்டும் கடமையேற்றனர்.

ஷண்முகா ஹபாயா சர்ச்சையின் ஆரம்பத்தில் இருந்து குரல்கள் இயக்கம் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளுக்குத் தேவையான அனைத்து தொழில் நுட்ப மற்றும் சட்ட ஆலோசனைகளையும் வழங்கி வந்தது.குரல்கள் இயக்க உறுப்பினர்களான சட்டத்தரணிகள் அஸ் ஹர் லதீப்,ரதீப் அஹ்மத் ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் ஆசிரியைகள் சார்பாக பல ஆக்கபூர்வமான வாதங்களை முன்வைத்தனர்.

அனைவருக்கும் தத்தமது கலாச்சார ஆடைகளை அரசாங்க அலுவலகங்களுக்கு அணிந்து செல்வதற்கான அடிப்படை உரிமை இலங்கை அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையில் அது மீறப்பட்ட போது ஒரு சிவில் அமைப்பு என்ற ரீதியில் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளுக்காக குரல்கள் இயக்கம் குரல் கொடுத்தது.

மேலும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பும் இந்த விடயத்தில் காத்திரமான பங்காற்றியுள்ளது.

இந்தப் போராட்டத்தில் விட்டுக் கொடுக்காமல் இறுதி வரைக்கும் தங்கள் உரிமையை மீளப்பெறுவதற்காக போராடிய ஆசிரியைகளின் உறுதியும்,திடமும் பாராட்டத்தக்கது. mn

5 comments:

  1. "The Muslim Voice" wishes the best for the Muslim Teachers at this school who fought and won the commnual battle against the extremist Tamil teachers who be all out to ban the use of the "Habaya/Hijab" dress worn by the Muslim female students - Alhamdulillah.
    Noor Nizam.
    Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. இந்த உரிமைக்காக போராடிய எம் சகோதரிகளுக்கும், அத்துடன் சட்டத்தரணிகளுக்கும், முஸ்லீம் உரிமைக்குரல் அமைப்புக்கும் எம் சமூகத்தின் சார்பாக நன்றிகள்

    ReplyDelete
  3. இந்த உரிமைக்காக போராடிய எம் சகோதரிகளுக்கும், அத்துடன் சட்டத்தரணிகளுக்கும், முஸ்லீம் உரிமைக்குரல் அமைப்புக்கும் எம் சமூகத்தின் சார்பாக நன்றிகள்

    ReplyDelete
  4. இந்த அபாயா விடயத்தை யாரும் பெரிதாக தூக்கிப்பிடிக்கத் தேவையில்லை. இது ஒரு போட்டியும் அல்ல. யாரும் வெற்றிபெறவும் இல்லை. இந்த நாட்டில் தமிழ் பேசும் இனத்தவரகளுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை வென்றெடுப்பதற்காகப் போராடுவோம். எங்களுக்குள் எந்தத் துவேச சிந்தனயும் தேவையற்றது. எப்போதும் போலவே நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ள வேண்டும். திருகோணமலை மாவட்ட சகல அரசியலவாதிகளும் சமூகங்களில் இருக்கக்கூடிய ஓய்வில் இருக்கும் உயர்பெரியார்களும் இந்த விடயத்தில் கடுமையாக உழைத்து சமூக சௌஜன்னியத்தைப் பேண உதவ வேண்டுஅமன்று சகல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

    ReplyDelete
  5. இந்த அபாயா விடயத்தை யாரும் பெரிதாக தூக்கிப்பிடிக்கத் தேவையில்லை. இது ஒரு போட்டியும் அல்ல. யாரும் வெற்றிபெறவும் இல்லை. இந்த நாட்டில் தமிழ் பேசும் இனத்தவரகளுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை வென்றெடுப்பதற்காகப் போராடுவோம். எங்களுக்குள் எந்தத் துவேச சிந்தனயும் தேவையற்றது. எப்போதும் போலவே நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ள வேண்டும். திருகோணமலை மாவட்ட சகல அரசியலவாதிகளும் சமூகங்களில் இருக்கக்கூடிய ஓய்வில் இருக்கும் உயர்பெரியார்களும் இந்த விடயத்தில் கடுமையாக உழைத்து சமூக சௌஜன்னியத்தைப் பேண உதவ வேண்டுஅமன்று சகல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.