Header Ads



மகிந்தவிற்கு பல பொய்களைச் சொல்லி கயிறு கொடுத்தார்கள், மைத்திரி மீள போட்டியிடுவதை எதிர்க்கிறேன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீளவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனை தான் எதிர்ப்பதாக முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்க் கட்சியில் இருப்பது எமக்கு பிரச்சினை கிடையாது. எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் நாம் எதிர்ப்பை வெளியிடுவோம்.

எனினும் நாடு இன்று அழிவுப்பாதையில் செல்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து ஏற்படுத்திய அரசாங்கத்தினால் நாட்டில் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல. ஜனாதிபதி மைத்திரி அரசியல் அமைப்பினை பிழையாக பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஏழு பேரின் தீர்ப்பினையும் உதாசீனம் செய்தார்.

இவ்வாறான ஓர் நபரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதனை நாம் எதிர்க்கின்றோம்.

மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் தரகு வேலை செய்தவர் பதுளையில் இருக்கின்றார். அப்படித்தான் மகிந்தவை இல்லாமல் செய்தார்கள்.

அந்த நபர்கள்தான் மகிந்தவிற்கு பல்வேறு பொய்களைச் சொல்லி கயிறு கொடுத்தார்கள். நான் அவர்களின் பெயர்களைச் சொல்லப் போவதில்லை, நாட்டு மக்களுக்கு அவர்கள் யார் என்று தெரியும் என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.