Header Ads



எனது தந்தையின் தலைமையில், விரைவில் ஆட்சிப்பீடம் ஏறுவோம் - நாமல்

நாங்கள் தோற்கவில்லை, சர்வதேசத்தின் கூட்டுச் சதியால் தோற்கடிக்கப்பட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், தனது தந்தையின் தலைமையில் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பதவி ஆசை பிடித்த இந்த அரசு நிரந்தரமில்லை. பதவி ஆசை பிடித்த இந்த பிரதமரும் நிரந்தரமில்லை. அதிகாரப் பகிர்வு என்று கூறி இந்த நாட்டை இந்த அரசு இரண்டாகப் பிளவுபடுத்த பார்க்கின்றது.

எனினும், பிரதான எதிர்க்கட்சியான நாம் இதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கமாட்டோம். இன்று எதிர்க்கட்சி வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியுடன்அமர்ந்திருக்கும் நாம், விரைவில் பிரதமர் பதவியுடன் ஆளுங்கட்சி வரிசையில்அமர்வோம்.

நாட்டு மக்கள் எமது பக்கமே உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் இதனை நாம் நிரூபித்துக் காட்டுவோம்.

தேர்தலை இந்த அரசு இழுத்தடித்தால் பெரும்பான்மைப் பலத்துடன் நாம் ஆட்சியமைத்துக் காட்டுவோம். நாட்டை முன்னேற்றிக் காட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. எந்தவிதமான தகுதியோ தகைமையோ இன்றி வெறுமனே நாட்டு சொத்துக்களைச் சூறையாடுவதிலும் ஒழுக்க்த்தில் மிகவும் அதளபாதாளத்தில் வாழும் இது போன்றவர்கள் மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் அழிவைத்தான் கொண்டுவருவார்கள் என்பதை இந்த நாட்டுமக்கள் உணர்ந்து செயற்படுவார்களா?

    ReplyDelete
  2. தமிழ் பயங்கரவாதத்தை வளர்த்துவிட்டு ரணில் யூத கைக்கூலியை அடுத்தமுறை கிழக்கு முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.