Header Ads



களுவான்கேனியில் மாணவி கௌரிதேவி, புனித இஸ்லாத்தை ஏற்றது ஏன்..? (முழு விபரம் இணைப்பு)

-Mohamed Nasir-

தனது 14 வயது வரை தான் சார்ந்த இந்துமதத்தோடு இருந்த மாணவிதான் தற்போது பரவலாக மதமாற்றம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்படுகின்ற மாணவி கிருஷ்ன குமார் கௌரி தேவி என்பவராவார்.

நான்கு வருடங்களாகவே இம் மாணவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டிராத, கண்டிக்காத பெற்றோரும், மற்றோரும் தற்போது கூச்சலிட்டு தன் மகளின் செயலுக்கு இனவாதம் பேசுவதில் எந்தவித நியாயமுமில்லை.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அம் மாணவியின் வீட்டார் பலதையும் பேசிக்கொண்டிருக்கும் போது, தனது மகளின் சுயவிபரத்தையும் கூறியபோதுதான், அம் மகளின் மனதில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளளது.

எங்களது மகள் முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்ததென்றும் , பெற்றோர் மரணித்ததால் அவர்களோடு உறவாகயிருந்த நாங்கள் தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் கூறிய விடயத்தை செவியுற்ற கௌரி தேவிக்கு, மாற்றம் தேவைப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை நான்கு வருடமாக அவரது பகுதியால் வழக்கமான தொழில்கள் செய்து வரும் முஸ்லீம் சகோதரர்களிடம் தெரிவித்து 
,"நான் இஸ்லாமிய பெண், என்னை அழைத்துச்செல்லுங்கள் "என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

இவ் விடயத்தை அப்பவே மௌலவிமாருக்கு அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
அதற்கு மௌலவிமார்கள், இந்த வயதில் இஸ்லாத்துக்கு வருவதாகயிருந்தால் பெற்றோருடன்தான் வரவேண்டுமென்று சொல்லியனுப்பியுள்ளார்கள்.

இந்த மாணவியை களுவன்கேனியில் அவரது சுற்றத்தார் சோனகத்திட புள்ள என்றே அழைப்பார்களாம்.

பெற்றோருடன் முறன்படும்போது "சோனகத்திட புத்திய காட்டுறா " என்றுதான் ஏசுவார்களாம்.
இவ்வாறான நிலையில்தான் இம் மாணவியின் மனதில் இஸ்லாத்தை பின்பற்ற வேண்டுமென்ற எண்ணம் தோன்றியுள்ளது. 

முதலில் நெற்றியில் பொட்டு வைப்பதை நிறுத்தியுள்ளார்.

அது மாத்திரமின்றி பாடசாலைக்கு சீருடையில் செல்லும்போது முழங்கால் தெரியாதளவு ஆடை அணிவதோடு, தனியார் வகுப்புகளுக்கு செல்லும் போது டவுசர் அணிந்தே சென்றிருக்கிறlறாராம்

சென்ற வருடம் ரமழான் மாத நோன்பையும் பிடித்திருக்கிறார்.

இவை அத்தனையும் இம் மாணவியின் செயற்பாட்டில் நடந்தேறிய வேளை கண்டிக்காத பெற்றோரும், மற்றோரும் இன்று தன் படிமுறை வளர்ச்சியில் 18 வயதை அடையும் வரை காத்திருந்து "இஸ்லாத்தை படிக்க வீட்டைவிட்டு வெளியேறுகிறேன், என்னை தேட வேண்டாம் " என பெற்றோருக்கு சுயமாக நான்கு பக்க கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறியதை மறைத்து,

அம் மாணவி கல்விகற்ற பாடசாலையில் கற்பித்த இஸ்லாமிய ஆசிரிய ஆசிரியைகள் மீது வீண் பழி சுமத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

உங்கள் பாடசாலைக் கல்வியின் உயர்ந்த அடைவு மட்டத்திற்கு இவ் இஸ்லாமிய ஆசிரியர்களின் பங்களிப்பு மிகையானது என்பதை ஏற்றுக்கொள்வீர்களா! 

இறைவனின் ஏற்பாடு இம் மாணவி இஸ்லாத்தையே காதலிக்கிறார்.... நீங்கள் கூறுகின்ற ஆசிரியரையல்ல.

கடந்த 4வருடங்களாக அவர் இஸ்லாத்துக்குள் வர முயற்சித்திருக்கிறார்.

- 18வயது பூர்த்தியாகும் வரை அவர் காத்திருந்து இந்த முடிவினை எடுத்துள்ளார், 

இம் மாணவியின் 
உளத்தூய்மையை கொச்சைப்படுத்த வேண்டாம்..
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து அம் மாணவியின் பெற்றோர்,
பிள்ளை விரும்புகின்ற மதத்தை பின்பற்ற சம்மதம் தெரிவித்திருந்தும், அதனை முறியடிக்கவே ஓரிரு இனவாதிகள் முன்னின்று செயற்பட்டு, சமூக வலைத்தளங்களில் மிகவும் கேவலமாக இஸ்லாமிய சமூகத்தை கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.

அன்பின் சகோதர சமூகமே,

நமக்குள் பிரிவினை வேண்டாம்

பிரிக்கத்துடிக்கும் கயவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம்.

நம்மை பிரிக்க பல்வேறு சக்திகள் கிளம்பியிருக்கின்றன.
அவதானமாகயிருப்போம்,

மாணவி கௌரிதேவி சுயமாக பெற்றோருடன் இணைந்து செல்ல இணக்கம் தெரிவித்தால் அழைத்துச்செல்லுங்கள்.

தனி நபரின் விடயத்தை சமூக பிரிவினையாக பார்ப்பதை தவிர்ப்போம்...

4 comments:

  1. யார் யாருக்கு அல்லாஹ் தீனைக் கொடுக்க விரும்புகின்றானோ அவரகளுக்கு அந்தப் பாக்கியம் கிடைத்தே தீரும். யார் யாருக்கு அல்லாஹ் தீனை நஸீபாக்க நினைக்கவில்லையோ அவருக்கு அந்தப் பாக்கியம் அவர் பெயரளவில் முஸ்லிமாக இருந்தாலும் கிடைக்கவே கிடைக்காது. இது அல்லாஹ்வின் வாக்குறுதி. இந்தப் பெண்ணையும் அவருக்குரிய வாழ்வியலையும் சிறப்பான முறையில் செய்து கொடுக்க வேண்டியது இதனோடு சம்பந்தப்படுகின்ற சகலரையும் சேர்ந்ததாகும். என்னையும் சேர்த்துத்தான். இதற்குப் பெறுமதியான பரிசு அல்லாஹ்விடம் இருக்கின்றது. அப் பெண்ணை நல்ல முறையில் அன்பாக பரிவுடன் வளர்த்தவரகளுக்கு அல்லாஹ் தன் கிருபையை வழங்குவானாக. ஹிதாயத்தை நஸீபாக்குவானாக. ஆமின்.

    ReplyDelete
  2. பிடிக்காத பொண்டாட்டியின் கால் பட்டாலும் குற்றம் கை பட்டாலும் குற்றம் என்று நமது பழையவர்கள் சொல்லுவது இதைத்தான். மனிதர்கள் நமது குறைகளை மற்றவர்கள் மேல் போட்டு தப்பிக்கப்பார்ப்பது சகஜம் தான் நடுநிலையாகச் சிந்திக்கும் பலருக்கு இது புரியும். இதனால் இனக்கலவரம் வரும் என பயங்கொள்ளத்தேவையில்லை.

    ReplyDelete
  3. ஒருவர் தனக்கு விருப்பமான மொழியைப் பேசுவது குற்றமல்ல. ஒருவர் தனது தாய் மொழியை கைவிட்டு வேறொரு மொழியைக் கற்றால் குற்றமல்ல அல்லவா?

    அதுபோல ஒருவர் தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்றுவதற்காக தான்பிறப்பால் பெற்ற மதத்தை கைவிடுவது குற்றமல்ல.

    இந்தப் பெண் குழந்தை இந்துப் பெற்றோரால் வளர்க்கப்பட்ட போதிலும் தனது பூர்வீகம் அறிந்த காரணத்தால் இஸ்லாத்தை தழுவ விரும்பியே வந்திருக்கின்றார். எனவே நாம் முஸ்லீம்கள் உட்பட அனைவரும் இதனை ஏற்று ஆதரிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அதுதான் சரியானதும் கூட.

    ஆனால் ஒன்று இதே போல ஒரு முஸ்லீம் குடும்பம் பிறப்பால் இந்துக்குழந்தை ஒன்றை எடுத்து வளர்த்து அந்தக் குழந்தை வளர்ந்து பூர்வீகம் அறிந்து இந்துவாக மாறிவிட நினைத்து இதேபோல முனைந்திருந்தால் முஸ்லீம்களாகிய நாம் இதேபோல நடந்து கொண்டிருப்போமா?

    மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் - முடிந்தால்!

    ReplyDelete

Powered by Blogger.