Header Ads



ஜனவரி 5 ஆம் நாளில், ஷஹீதாக்கப்பட்ட அய்யாஷ்


இச்சமூகமும் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும், பெரிய படிப்புகளை படிக்க வேண்டுமென கல்விக்கான ஊக்கததொகைகள் உதவிகள் வழங்கி வழிகாட்டுதல் முகாம்களை எமது அமைப்புகளும் அறக்கட்டளைகளும் நடத்தும் போதெல்லாம். என் கண் முன்னே முதலாமவராக வந்து நிற்பவர் யஹ்யா அய்யாஷ்.

யூதர்கள் தான் அறிவில் சிறந்தவர்கள், யூதர்கள் தான் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நவீன தொழில்நுட்பங்களை உலகிற்கு தந்தவர்களென அடிப்படையற்ற ஓர் பொய்யை முற்றுமுழுதாக நம்பிக் கொண்டிருக்கும் இந்த உம்மத் இவரைப் பற்றி சரிவர அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்!

இவர் தான் யஹ்யா அப்துல் லதீஃப் அய்யாஷ். இவரை யூதர்கள் இன்ஜினியர் என்றே அழைத்தனர். இவர் இருக்கும் காலம் வரை "இன்ஜினியர்" எனற சொல்லைக் கேட்டாலே யூதர்கள் அஞ்சி நடுங்கினர். "The Engineer of Death" என்றும் யஹூதிகளின் மத்தியில் அறியப்பட்டார். 1966ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் அமைந்திருக்கும் ரஃபாத் நகரில் பிறந்தார்.

மேல்நிலைப் பள்ளிப்படிப்பை திறம்பட முடித்த நிலையில் அல் ஜாமிஅத்து பிர்ஜீத்தில் (பிர்ஜீத் பல்கலைக்கழ்கம்) மின் பொறியியல் துறையில் கற்றுத் தேர்ந்து 1988ல் பொறியியலாளர் பட்டம் பெற்றார். 1992-ன் துவக்கத்தில் இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் படையணியில் இணைந்த அய்யாஷ் ஃபலஸ்தீன் பிரதேசத்தில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டே யூதர்களுக்கு எதிரான ஃபலஸ்தீன புரட்சியில் பயன்படுத்தத் தக்க ஆயுதங்களை தயாரித்தார்.

1994 ஹெப்ரானில் உள்ள மஸ்ஜித் அல் இப்ராஹீமியில் யூதர்களால் நட்த்தப்பட்ட கூட்டுப்படுகொலையைத் தொடர்ந்து "இஸ்திஷ்ஹாத்" தாக்குதல்களை யூத மண்ணில் அறிமுகப் படுத்தினார்.

யூதர்கள் இவரை எப்படியாவது தீர்த்துக் கட்டிட வேண்டுமென 3 வருடங்களாகக் போராடினர். 100க்கும் மேற்பட்ட உளவாளிகளையும் முனாஃபிக்குகளையும் பயன்படுத்தி இவரது அசைவுகளை கண்காணிக்க முயற்சித்தனர். இறுதியில் 1996 ஜனவரி 5 ஆம் நாள் காஸாவிலுள்ள பெத் லாஹியாவில் ஒரு மொபைல் போனில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலினால் ஷஹீதாக்கப்பட்டார். இவரது ஜனாஸாவில் 5 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

இவரது கொலைக்கு பழி தீர்க்கும் முகமாக இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் படையினர் நிகழ்த்திய இஸ்திஷ்ஹாதா தாக்குதல்களில் 70க்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டதோடு 100க்கும் மேலானோர் காயமுற்றனர்.

யஹ்யா அய்யாஷ் மட்டுமல்லாது அல்லாஹ்வின் தீனுக்காக அனைத்தையும் அர்ப்பணித்த போராளிகள் பலரும் கல்வியிலும் குறிப்பாக பொறியியல் துறையிலும் திறம்படத் தேர்ந்தவர்கள் தாம். இத்தாலிய அறிவியல் ஆய்வாளரும் ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிறியருமான டீகோ கேம்பட்டா & அரசியல் மற்றும் பொருளாதார நிபுணரான பேராசிறியர் டாக்டர். ஸ்டீஃப்ன் ஹெர்டாகும் இணைந்து "ENGINEERS OF JIHAD" என்ற பெயரில் 200பக்க நூலொன்றையும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Muhammad Azharudeen

No comments

Powered by Blogger.