Header Ads



42 நூல்களின் முதற்பிரதிகளை, ஒரே தடவையில் வாங்கும் புரவலர்

 ஆயிரம் நூல்களின் முதற் பிரதிகளை வாங்கிய முதல் புரவலர் எனும் கிண்ணஸ் சாதனையை நிகழ்த்தவிருக்கும் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், எதிர்வரும் 12.01.2019 அன்று தமிழ் நாடு பயணமாகிறார்.இது வரை 934 முதற் பிரதிகளை வாங்கியுள்ள புரவலர் சென்னையில் நடைபெறும் புத்தகத் திரு விழாவில் மணிமேகலைப் பிரசுரத்தின் 42 நூல்களின் முதற்பிரதிகளை வாங்கவுள்ளார்.ஒரே மேடையில்,ஒரே தடவையில் இத்தனை நூல்களை வாங்கும் புரவலரும் இவரேயாவார்.

மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர்,ரவி தமிழ்வாணனின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இவ்வெளியீட்டு விழாவில்.தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களான,இளைய திலகம் பிரபு நடிகை கஸ்தூரி.நடிகர்களான எஸ்,தியாகராஜன்,பிரசாந்த்.ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்கின்றனர்.

ஐந்து நாட்கள் தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் இலக்கியப்புரவலர் ஹாசிம்உமர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன்,அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.சிரேஷ்ட கலைஞர் கலைச்செல்வன்,புகைப்படக் கலைஞர் இன்பாஸ் சலாஹுதீன் ஆகியோர் புரவலர் புத்தகப் பூங்காவின் சார்பில் பங்கேற்கின்றனர்.

No comments

Powered by Blogger.