Header Ads



336 கோடி ரூபா ஹெரோயின் - பங்களாதேஷ் பெண், இலங்கையிலிருந்து தப்பியோட்டம்

இலங்கை முழு­வதும் ஹெரோயின் விநி­யோ­கிக்கும் பாது­காப்பு இல்­ல­மா­கவும் மத்­திய நிலை­ய­மா­கவும் செயற்­பட்­டு­வந்த வீடொன்றை சுற்­றி­வ­ளைத்து அங்­கி­ருந்து 336 கோடி ரூபா பெறு­ம­தி­யான 278 கிலோ ஹெரோயின் போதைப்­பொ­ருளை மீட்ட விவ­கா­ரத்தின் பின்­ன­ணியில் உள்ள சந்­தே­க­நபர் பங்­க­ளாதேஷ் பெண் ஒரு­வ­ரெனத் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் இடம்­பெறும் பொலிஸ் போதைப்­பொருள் தடுப்புப் பிரிவின் விசா­ர­ணை­களில் இந்த தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், பொலி­ஸாரின் சுற­றி­வ­ளைப்­புக்கு முன்­ன­ரேயே அந்தப் பெண் இலங்­கையை விட்டு தப்பிச் சென்­றுள்­ள­தாக அது தொடர்­பி­லான மேல­திக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

எவ்­வா­றா­யினும் இலங்­கை­யி­லி­ருந்து தப்பிச் சென்­றுள்ள குறித்த பெண் அதன் பின்­ன­ரேயே தெஹி­வளை அத்­தி­டிய வீட்டின் ‘ரிமோர்ட் கொன்ட்ரோல்’ திறப்பை அனுப்பி வைத்­துள்­ள­தா­கவும் அவ்­வீட்­டுக்கு செல்­லாது கல்­கிசை பகுதி வீட்டில் தங்­கி­யி­ருக்­கு­மாறு கைதான இரு­வ­ருக்கும் அப்­பெண்ணே ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தா­கவும் மேல­திக விசா­ர­ணை­களில் நம்­ப­க­ர­மாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உய­ர­தி­காரி ஒருவர் கூறினார்.

இந்­நி­லையில் இந்த பங்­க­ளாதேஷ் பெண் சர்­வ­தேச போதைப்பொருள் கடத்தல் கும்­பலை சேர்ந்­த­வ­ராக இருக்க வேண்­டு­மென சந்­தே­கிக்கும் பொலிஸார், அவ­ருக்கு இலங்­கையில் இந்த ஹெரோயின் சட்­ட­வி­ரோத வர்த்­த­கத்தை முன்­னெ­டுக்க வலை­ய­மைப்­பொன்று இருந்­தி­ருக்க வேண்­டு­மெனத் தெரி­விக்­கின்­றனர். அதன்­படி அவ்­வ­லை­ய­மைப்பின் இலங்கை உறுப்­பி­னர்­களை அடை­யாளம் காணவும் அவர்­களைக் கைது செய்­யவும் தற்­போது சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் கைதான இரு பங்­க­ளாதேஷ் பிர­ஜை­க­ளி­டமும் தடுப்­புக்­கா­வலில் நீண்ட விசா­ர­ணைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் போதைப்­பொருள் தடுப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் அதி­ரடிப் படையின் கட்­டளைத் தள­பதி எம்.ஆர். லத்­தீபின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் போதைப்­பொருள் தடுப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்­சீவ மெத­வத்த, அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் திலக் சமிந்த தன­பால ஆகி­யோரின் வழி நடத்­தலில் போதைப்­பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் லூட­வைட்டின் கீழான சிறப்புக் குழு­வி­னரால் மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்தப் போதைப்­பொருள் பாகிஸ்­தா­னி­லி­ருந்து கொண்டு வரப்­பட்­டி­ருக்­கலாம் என்று சந்­தே­கிக்கும் பொலிஸார், தெஹி­வளை வீட்­டி­லி­ருந்து இறு­தி­நிலை போதைப்­பொருள் பயன்­பாட்­டா­ளர்­க­ளுக்கு பயன்­ப­டுத்தும் வகையில் இர­சா­ய­னங்­க­ளுடன் கலக்­கப்­ப­டு­வ­தாக நம்­பு­கின்­றனர். இலங்­கையில் சாதா­ர­ண­மாக வீதி­களில் கைதாகும் போதைப் பொருள் பயன்­ப­டுத்­து­வோ­ரி­ட­மி­ருந்து மீட்­கப்­படும் ஹெரோயின் போதைப் பொருளில் 10 வீதமே சுத்­த­மான ஹெரோயின் அடங்­கி­யி­ருக்கும் என்று சுட்­டிக்­காட்­டிய விசா­ர­ணை­க­ளுக்குப் பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர், எனினும் தெஹி­வளை வீட்டில் மீட்­கப்பட்ட ஹெரோ­யினில் 85 வீத­மான சுத்­த­மான ஹெரோயின் இருப்­ப­தாகக் குறிப்­பிட்டார். இந்­நி­லையில் அதனை கடை­நிலை போதைப்­பொருள் பயன் படுத்­து­வோ­ருக்கு ஏற்ற விகி­தத்தின் அடிப்­ப­டையில் அந்த வீட்­டி­லி­ருந்தே தயார் செய்­யப்­பட்டு நாடு முழுதும் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­க­ாட்டினார். கடந்த டிசெம்பர் 14 ஆம் திகதி நுகே­கொட – பாகொட பகு­தியில் வைத்து முச்­சக்­கர வண்­டி­யி­லி­ருந்து மீட்­கப்­பட்ட 1 கிலோ நிறை­யு­டைய ஹெரோ­யி­னுடன் இருவர் கைது செய்­யப்­பட்­டனர். அதேபோல் டிசெம்பர் 15 ஆம் திகதி ரத்­ம­லா­னையில் கைதான பங்­க­ளாதேஷ் பெண்­ணிட­மி­ருந்து  ஒரு கிலோ மற்றும்  ரத்­ம­லானை பகு­தியில் குறித்த பெண் தங்­கி­யி­ருந்த வீட்­டி­லி­ருந்து 31 கிலோ நிறை­யு­டைய ஹெரோயின் போதைப்­பொருள் மீட்­கப்­பட்­டன.

இவை­ய­னைத்தும் கேக் பெட்­டி­களில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தன. கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி மீட்­கப்­பட்ட ஹெரோ­யினும் கேக் பெட்­டி­க­ளி­லேயே சூட்­சு­ம­மாக மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில் இவை­ய­னைத்தும் ஒரே வலை­ய­மைப்பின் போதைப்­பொருள் என்­ப­தையும், கைதான பங்­க­ளாதேஷ் பிர­ஜைகள் இரு­வரும் சர்­வ­தேச போதைப்­பொருள் வலை­ய­மைப்பு உறுப்­பி­னர்கள் என்­ப­தையும் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் கண்­ட­றிந்­துள்­ளனர். இந்­நி­லையில் மேல­திக விசா­ர­ணை­களை பொலிஸார் தொடர்­கின்­றனர்.

இலங்கை வர­லாற்றில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஒரு­கொ­ட­வத்தை பகு­தியில் வைத்து சுங்கப் பிரிவு மற்றும் பொலிஸ் போதைத்­த­டுப்பு பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­பட்ட 261 கிலோ நிறை­யு­டைய ஹெரோயின் தொகையே இலங்­கையில் மீட்­கப்­பட்ட அதி­கூ­டிய தொகை கொண்ட போதைப்­பொ­ரு­ளாக கடந்த வரு­டத்தின் இறு­திநாள் வரை காணப்­பட்­டது.

எனினும், தெஹி­வ­ளையில்  278 கிலோ நிறை­யு­டைய 336 கோடி ரூபா பெறு­ம­தி­வாய்ந்த ஹெரோயின் மீட்­கப்­பட்ட நிலையில் தற்போது அதுவே இலங்கையிலிருந்து மீட்கப்பட்ட அதிகூடிய ஹெரோயின் தொகையாகக் கருதப்படுகின்றது.-Vidivelli

No comments

Powered by Blogger.