Header Ads



முஸ்லிம் பாடசாலை அதிபர்களுடன், அசாத்சாலி சந்திப்பு - 2 விடயங்களை வலியுறுத்தினார்


மேல்  மாகாண ஆளுநர் எம். அசாத்  சாலி அவர்கள் தனது மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக விஷேட செயற்றிட்டமொன்றிற்காக ஆலோசனைகளை வழங்குமாறு பாடசாலை அதிபர்களை கேட்டுக் கொண்டார். 

கம்பஹா, களுத்துறை,கொழும்பு கல்வி வலயங்களைச் சேர்ந்த 64 முஸ்லிம் பாடசாலை அதிபர்களை இன்று -31- தனது காரியாலயத்தில் சந்தித்த போது  இதனை வலியுறுத்தியுள்ளார். 

பொதுப்பரீட்சைகளின் பெறுபேற்றின் அடிப்படையில் மாகாணங்களிற்கிடையான தரப்படுத்தலில் முதலாம் நிலையிலிருந்த மேல் மாகாணம் தற் போது  மூன்றாம் நிலைக்கு பின்னடைந்துள்ளது.  ஆகவே இந் நிலைமை திருத்தியமைக்கப்பட  வேண்டுமென குறிப்பிட்டார். 

மாகாண கல்விப் பணிப்பாளர்கள் ஜயந்த நானாயக்கார மற்றும் விமல் குணரத்ன ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர். 

பாடசாலை  அதிபர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்த போது மேல் மாகாணத்தில் ஆசிரியர்களின் இட மாற்றங்களில் அரசியல் தலையீட்டை தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என உறுதியளித்தார். 

பாடசாலைகளில் அரச சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக, கட்டாயம் ஒரு காவலாளியும், பிள்ளைகளின் சுகாதாரத்தை பேணுவதற்காக மலசலகூடங்களை சுத்தம் செய்வதற்காக ஒரு சுத்திகரிப்புத் தொழிலாளியும் இருக்க வேண்டும்  எனக் கூறினார். 

ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதன் மூலம் மாணவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்பதால் சுத்திகரிப்புத் தொழிலாளிக்குரிய கொடுப்பனவுகள் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ஆளுநர் குறிப்பிட்டார். 

 உடைந்த தளபாடங்களை வகுப்பறைகளினுள் பேண வேண்டாமெனவும் பாடசாலைச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக மாணவர்களின் கற்றலுக்கு முன்னுதாரணமாக இடமாக பேண வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். 


2 comments:

  1. முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரங்களை கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்

    ReplyDelete
  2. Why he not discussed about his plan of opening the Muslim school during the time of Ramadan and why not those principals too not talk about it.

    ReplyDelete

Powered by Blogger.