January 13, 2019

ஹிஸ்புல்லாவை அகற்ற 10.000 கையொப்பங்களை சேகரிக்கும் கருணா

தமிழ் தேசிய கூட்டமைப்பினை நம்பிநம்பி வாக்களித்த நிலையில் அவர்கள் இன்று தங்களது கொள்கையில் இருந்து விலகி சென்றுள்ளதாகவும் மாற்று அரசியலை செய்து வருவதாகவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் போட்டிகள், பொறாமைகள் பிரச்சினைகள் காரணமாக எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைவடையும் நிலையுள்ளதாகவும் அவர் எதிர்வுகூறினார்.

மட்டக்களப்பு கல்லடி, நாவற்குடாவில் உள்ள தனியார் விடுதியில் இன்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அரசியலில் ஒரு அரிச்சுவடியாகும். சம்பந்தரை தலைவராக்கியதே நான்தான். அவரை நான் விமர்சிப்பதில் யோகேஸ்வரனுக்கு என்ன பிரச்சினையுள்ளது.

வாகனேரி நீர்பாசனத்திட்டம் பிரிப்பினை நான் அமைச்சராக இருந்தபோது தடுத்து நிறுத்தியிருந்தேன். கல்லடியில் உள்ள நீர்வளங்கள் வடிகாலமைப்புச்சபைக்குரிய காணியை கூட ஹிஸ்புல்லா கைப்பற்ற முனைந்தபோது அதனைக்கூட நான் நிறுத்தியிருந்தேன்.

தற்போது அதுவும் பறிபோகும் நிலையில் உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு ஆதரவளிக்கின்றது.

அண்மையில் வாகனேரி பிரிப்பு எதிராக நாங்கள் போராட்டம் நடாத்திக்கொண்டிருந்தபோது அழையா விருந்தாளியாக வந்த யோகேஸ்வரன் முஸ்லிம்களுக்கு வக்காளத்துவாங்கினார்.

அடுத்ததேர்தலில் அவர் அரசியலில் இருக்கப்போதில்லையென்பதுடன் முகவரியில்லாதவராக மாற்றம்பெறுவார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும்போட்டிகள், பொறாமைகள் பிரச்சினைகள் காரணமாக எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைவடையும்.

அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் பாரிய கட்சியாக எமது கட்சி மாறும். அதற்கான சந்தர்ப்பம் இன்று வந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு எவரும் இல்லாதநிலையே உள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளவர் கடந்த காலத்தில் இனவாதத்தினை கக்கியவர். அவர் ஆளுனராக நியமிக்கப்பட்டதானது தமிழ் மக்கள் மத்தியில் கசப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி காந்திபூங்காவில் கையெழுத்துப்போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளோம். ஆளுனரை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையினை ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்காக பத்தாயிரம் கையெழுத்துகளை பெறும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.

இன்று தமிழ் மக்களுக்கு அரசியல்வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. காலம்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தநிலையில் இன்று அதன் கொள்கையில் இருந்து விலகி மாற்று அரசியலைசெய்து கொண்டுள்ளது. இதற்கு ஒரு முடிவுகட்டப்பட வேண்டும் என்றார்.

17 கருத்துரைகள்:

அப்ப நாம 10001 கையொப்பம் வேண்டி ஹிஸ்புல்லா வேண்டும் என்று game ஓவர்

For this terrorist only, arippaaayrukku..... Mahindavin dramavo...?
Hisbullah...umathu katchi......da eruma

This guy is a terrorist and mass murderer. He should be behind bars.

மற்ற இனத்தை அழித்து வாழ நினைக்கும் பாசிஸ சிந்தனையுள்ள கர்ணா அவர்களே!
ஜனநாயகத்தை ஆணிவேராக உள்ள நமது நாட்டை சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் சில கள்ளர்கள் அவர்களின் சுயநலதிற்காக அவர்களின் சர்வதிகார போக்கால் நாட்டை கைப்பற்றி அதை சர்வதிகார நாடாக மாற்றம் செய்ய முயற்சிதார்கள் அதற்கு நீங்கள் வாழ்த்துசொல்லி உதவனீர்கள் அதனுடய விளக்கமென்ன?!!!

இலங்கையின் அனைத்து பாகங்களிலுமுள்ள தமிழர்கள் இனவாதியான கிழக்கு மாகாண ஆளுனருக்கு எதிராக கையெழுத்திட தயாராகவும் இருக்கிறார்கள்.

ஹிஸ்புல்லா வேண்டுமென்று நாங்கள் ஒரு லட்சம் கையெழுத்துக்கு இறங்குவோம். முஸ்லிம்கள் இன்று விழித்துக்கொண்டார்கள் தமிழ் பயங்கரவாதிகளுக்கு உடனுக்குடன் பதில் கொடுக்க நாம் தயார்

பிரபாகரனிடமிருந்து கிழக்கைப் பிரித்துத் தந்த ராசா! இனி எங்களது ஆட்சிதான்டா. அஜன் எப்படிடா இருக்கு.

United Nation kku anuppina kaiyeluthu enna nadantha

Comedy news do you have a 10000 suporters

யார் என்ன சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கருணா அம்மான் எனப் போற்றப்படும் முரளிதரன் மாபெரும் வீர சக்கரவர்த்தி என்பதனை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அவர் சாதித்த சாதனைகள் கணக்கிலடங்காது. உதாரணத்திற்குää காத்தான்குடி மண்ணிலே ஆகஸ்ட் 3ம் திகதி 1990ல் அன்னார் நிகழ்த்திய வீர விளையாட்டுகள் போற்றுதற்குரியது. 147 வணக்கசாலிகளை ஈவிரக்கமின்றி சிறுவர் குழந்தைகள் என்ற வித்தியாசம் இன்றி கொன்று குவித்த மாவீரராகவே அன்னார் இன்றும் கருதப்படுகின்றார். மேலும், ஏறாவுர் பள்ளியில் நடைபெற்ற கொலைச்சம்பவம் மற்றும் 700 பொலிஸ் அதிகாரிகளைச் சுட்டுக் கொன்று விளையாடிய சம்பவம் மேலும் புனித ஹஜ்ஜினை முடித்துவிட்டு ஊர் திரும்பிய புனித யாத்திரிகர்கள் மற்றும் மில்லத் நகர் அழிஞ்சிப்பொத்தானை போன்ற இடங்களில் இவரால் நடாத்தப்பட்ட வீரதீர பராக்கிரம செயற்பாடுகள் அன்னாரின் வீர விளையாட்டினை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
இதனைப் போன்ற முஸ்லிம் இனத்திற்கு எதிரான பல்வேறு சம்பவங்களுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட மாவீரரே கருணா அம்மான் அவர்கள். இன்னும் எத்தனையோ சம்பவங்களை அடுக்கி அடுக்கிக் கொண்டே போகலாம். விரிவு அஞ்சி தவிர்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாத காலத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டது தொடர்பிலும் அதில் கருணாவின் பங்கு தொடர்பிலும் மனித இனத்துக்கு எதிரான அவரின் கடந்த கால நடவடிக்கை தொடர்பிலும் விசாரணயை வலியுறுத்தி 200000 கையொப்பங்கள் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படல் வேண்டும்

சுய நலத்துக்காக LTTE யையும் அழித்து , தமிழ் மக்களையும் காட்டிகொடுத்து அவர்களையும் அழித்து தமிழனுடைய அட்ரெஸ்யையே அழித்தொழித்த என் ராசா உனக்கு வாழ்த்துக்கள்.

First of all this man should be in jail.He is hardcore terrorist responsible for the death of thousand of people,600 hundred policemen,bus load of Bhikkus and destroyed Srilanka's economy.having done such barbaric act,now talk against lawful appointment of educated person to the responsible post.

This is case of multi cultural,multi national country,how they would behave in their separate state.This is appointed by this country's president.So if they cannot accept the decision of president he is not law full person but criminal.

For last 30 years they destroyed Srilanka. Now tye courted terrorist,Alosius,Mahendran,Maharaja,Kuganathan destroying Srilankas economy.Yet they are great?

This people must keep in mind that this country is belongs to Muslims,Sinhalese,Tamils,Burger and Malay.So anyone of them can hold any post.

தமிழினத்தையே காட்டி கொடுத்த பெருமையும் இவரையே சேறும் இதற்கு வக்காலத்து வாங்கும் Ajonக்கும் அந்த பெருமையில் பங்குண்டு.

Anu shan,
வைத்தியசாலைகளுக்குப் போனால் இன்று பிறந்த பாலகர்களின் விரல் அடையாளங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்

Post a Comment