Header Ads



இந்நாடு சிங்களபௌத்த நாடு, என்பதே எனது நிலைப்பாடு - திலும் அமுனுகம Mp

வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் வாயை திறந்தால் இராணுவ முகாம்களை மூடுமாறே கோருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று -29- நிகழ்வில் கலந்து கொண்ட அவர் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். இதன் போது அங்கு சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

நாட்டில் ஜனாதிபதியை வைத்திருப்பதா? இல்லையா? அடுத்த பிரதமர் யார் இதுபோன்ற விடயங்களில் தீர்வுகளை ஐரோப்பிய நாடுகளே எடுக்கின்றன.

இந்த மேற்கத்தேய நாடுகளின் உதவியுடனே வடக்கு, கிழக்கில் யுத்தம் நிலவியது. இன்று வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் வாயை திறந்தால் இராணுவ முகாம்களை மூடுமாறே கோருகின்றனர்.

ஆனால் மக்கள் இராணுவத்தை நீக்குமாறு கோரவில்லை. இன்று வடக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினரே உதவுகின்றனர்.

இதற்கு இராணுவத்திலுள்ள பெரும்பாலானவர்கள் பௌத்தர்களாக இருப்பதே காரணம். இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்பதே எனது நிலைப்பாடு. ஆகவே எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டை பிரிக்க சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.

தற்போதைய சூழ்நிலையில் மேற்கத்தேய நாடுகள் மீண்டும் தங்கள் கைவரிசையை காண்பிக்க ஆரம்பித்துள்ளன என்றார்.

1 comment:

  1. இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடுதான். அப்படியாயிருந்தால் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் மக்களை பரமிய முறைப்படி நாடுகடத்துவோமா.

    ReplyDelete

Powered by Blogger.