Header Ads



ஜம்மியத்துல் உலமா, இந்தக் காரியத்தை செய்ய வேண்டும் - உரிமையுடன் கேட்கும் யாழ்ப்பாண மக்கள்

1990 ஆம் ஆண்டு  யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற  வடக்கின் ஐந்து மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள்  அனைத்து உடமைகள் பணம் நகை என்பன கொள்ளையடிக்கப் பட்டு புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப் பட்டு வெளியேற்றப் படதை இலங்கை ஜம் இயதுல் உலமாவின் உறுப்பினர்கள் அறிந்திருப்பார்கள். 

இது ஒன்று சாதாரண சம்பவம் அல்ல. சுமார் 85,000 முஸ்லிம்கள் அனைத்தையும் இழந்து வீடு வாசல்களை  இழந்து அகதிகளாக தமக்கு முன்பு அறிமுகம் இல்லாத ஊர்களின் வீதிகளில் தஞ்சம் புகுந்தார்கள் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ரோசத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய நிகழ்வு. அது ஒரு புறமிருக்கட்டும். 

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் முஸ்லிம்கள் தமது தாயகப் பூமிக்கு திரும்பிச் சென்று பார்த்த சமயம் அவர்களுடைய வீடுகள் பாடசாலைகள் பள்ளிவாசல்கள் எல்லாம் உடைக்கப் பட்டு கூரைகள் கதவுகள் ஜன்னல்கள் எல்லாம் அகற்றப் பட்டு கட்டிடங்களுக்குள் மரங்கள் வளர்ந்து கட்டிட எச்சங்களே  காணப் பட்டன.

அவற்றில் பல பள்ளிவாசல்களை  யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமக்கிடையேயே வசூலித்து மீளமைத்துள்ளனர். இப்பணிக்கு ஒரு சில வெளியூர்வாசிகளும் உதவிகள் செய்துள்ளனர்.  இறைவனின் வீடு என்பதால் மக்கள் தம்மாலான பங்களிப்புகளைச் செய்து பள்ளிவாசல்களை மீளமைத்துள்ளனர். இருந்தாலும் இன்னமும் மீளமைக்கப் படாமல் அத்திபாரமாக காணப் படுகின்ற பள்ளிவாசலும் யாழ்ப்பாணத்தில் இன்றும் காணப் படுகின்றது. 

இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையால் வடமாகாணத்தில் எல்லா மாவட்டங்களும் பாதிப்படைந்துள்ள போதிலும்  யாழ்ப்பாண முஸ்லிம்களின் பாதிப்பு விகிதம் அதிகமானதாகும். முல்லைத்தீவு வவுனிய மன்னார் மாவட்டங்களுக்கான நிவாரன மற்றும் மீள்குடியேற்றப் பணிகளை செய்வதற்கு அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமாகிய கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் இருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களும் சில பணிகளைச் செய்து வருகின்றார். 

ஆனால் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கென்று பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஒருவரும் இல்லை. மேலும் இவர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை யாழ்ப்பாணத்திலுள்ள அதிகாரிகள் திட்டமிட்டுத் தடுக்கிறார்கள்.  2011 ஆம் ஆண்டு இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஆயிரம் வீடுகள் வழங்க இணங்கப் பட்ட போதிலும் 2015 வரை எந்த ஒரு வீடும் கட்டப் படவில்லை. உண்ணாவிரதங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்பன செய்யப் பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப் பட்ட பிற்பாடு 2016 தொடக்கம் 25 வீடு 50 வீடு என்று 125 வீடுகளே இந்திய உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப் பட்டன.  புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அமைச்சர் ரிஷாத் மேற்கொண்ட முயற்சிகளினூடாக வடக்கு மீள்குடியேற்ற செயலணி ஒன்றூ உருவாக்கப் பட்டு அதனூடாக 50 வீடுகள் வரை கட்டுவதற்கான உதவிகள் வழங்கப் பட்டன.

 ஆனாலும் மீள்குடியேற்றத்துக்கு 2000 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ள போதிலும் கடந்த 8 ஆண்டுகளாக இழுத்தடித்து ஐந்து பத்து என வழங்கப்பட்டு தற்போது கிடப்பில் போடப் போடப்பட்டுள்ள அல்லது நிற்பாட்டப் பட்டுள்ள திட்டத்தை நம்பி எந்தப் பலனும் இல்லை. மேலும் 2017 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்துக்கான வடக்குச் செயலணியூடாக அப்போதைய அமைச்சர் ரிஷத் மற்றும்  அமைச்சர் சுவாமிநாதன் போன்றவர்களால் யாழ்ப்பாண முஸ்லிம்களில் 200 பேருக்கு வீடமைப்பதற்காக ஒதுக்கப் பட்ட 160 மில்லியன் ரூபாவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அப்படியே திருப்பி அனுப்பியிருந்தது. அத்துடன் 2018 ஆம் ஆண்டு ஒதுக்கப் பட்ட நிதியும் பாவிக்கப் படவில்லை. இன்னும் சில நாட்களில் வருடம் முடிவடைவதால் அந்த நிதியும் திருப்பி அனுப்பப் படும். 

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வீடமைப்பு பள்ளிவாசல் மீளமைப்பு என்பன ரத்தம் சிந்தாத ஒரு அறப் போராட்டம் என்பதை நாம் உணர வேண்டும். இதற்கு அறபியில் என்ன அர்த்தம் என்பது ஜம் இயதுல் உலமாவுக்கு புரியும். 

அதேவேளை நீண்ட கால இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் உடனடியாக மீள்குடியேறுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களது தொழிலை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவது, பாடசாலைப் பிரச்சினை, ஆங்கில மொழி மூலம் கற்றபிள்ளைகளுக்கு யாழ் ஒஸ்மானியாவிலோ ஹதீஜாவிலோ ஆங்கில மொழிமூலமான கல்வித் திட்டம்  இல்லாமை போன்ற பிரச்சினைகள் காணப் படுகின்றன. மேலும் மீள்குடியேறுவோர் வீடு கட்ட எடுக்கும் பதங்களில் அவர்களுக்கான உணவு போக்குவரத்து அத்தியாவசிய தேவைகளுக்காக 30000 ரூபா வரை  மாதாந்தம் தேவைப் படும் என்பது இன்னொரு பிரச்சினை. 

மேலும் உடைந்து போயுள்ள வீடு ஒன்றைக் கட்டுவதானால் ஒரு ஓலையிலான அல்லது தகரத்திலான கொட்டில் ஒன்றை அமைத்து அதில் சில மாதங்கள் வாழ வேண்டும். அதைப் பார்த்த பின்னர்  தான் அதிகாரிகள் உதவி வழங்க அக்குடும்பத்தை தெரிவு செய்வார்கள். பிறகு வீடு கட்டுவதற்கு வரைபடம் தயாரித்து மாநகர சபையின் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு காணி உடமையாளர் தன்னுடைய பணத்தில் ஏறக் குறைய 150,000 ரூபா செலவளித்து அத்திபாரம் கட்ட வேண்டும். அதனை அதிகாரிகள் தமக்கு வசதியான நேரத்தில் வந்து பரிசோதித்து அதில் பல்வேறு விசாரணைகளை நடத்தி அளவீடுகளில் ஒரு அடி பிழைத்தாலும் அதனை உடைத்துக் கட்டுமாறு பணித்து அதனைச் செய்த பின்னர் தான் முதல் கட்ட நிதிக்கு சிபாரிசு செய்வார்கள். அது கிடைக்க எப்படியும் இரண்டு மாதாமாகிவிடும். அதனைக் கொண்டு சுவரைக் கட்ட வேண்டும். அதனை வந்து அதிகாரிகள் பரிசீலித்து அதற்கு அனுமதி வழங்க இன்னும் இரண்டு மாதங்களாகிவிடும். இவ்வாறு வீட்டை முழுமையாக கட்டி முடித்து உடவி பெற எட்டு பத்து மாதங்கள் செல்லும். அதுவரை குடும்பம் அந்த தகர கொட்டிலில் தான் வாழ வேண்டும்.  அகதியாக வாழ்ந்தவர்கள் அத்திபாரம் அமைப்பதற்கான 150,000 ரூபாவும் என்ன செய்வார்கள்? 

இவ்வாறான பல நிபந்தனைகள் நீண்ட கால இடம்பெயர்க்கப் பட்டவர்களின் மீள் குடியேற்றத்தை அசாத்தியமாக்கியுள்ளது. திட்டமிட்டு மேற்கொள்ளப் படும் இழுத்தடிப்புகள்  காரணமாக பல குடும்பங்கள் மீள்குடியேறும் தமது எண்ணத்தை கைவிட்டுள்ளன. இதன் காரணமாக வெளியேற்றத்துக்கு முன்பு நூற்றுக்கு நூறு வீதம் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசத்தில் இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் மாற்று மதத்தவருக்கு விற்கப் பட்டுள்ளன. 18000 பேர் வாழ்ந்த இப்பிரதேசத்தில் 4 பெரிய ஜும்ம பள்ளிகள் உட்பட 13 பள்ளிவாசல்கள் காணப் பட்டன.  அவற்றில் மதீனா நகர் பள்ளி முற்றாக அடையாளம் தெரியாமல் போயுள்ளது. சாபி நகர் பள்ளி உடைக்கப் பட்டு நிலமாக காட்சி தருகின்றது. 

ஏற்கனவே பள்ளிவாசல்கள் கோவில்களாகவும் கத்தோலிக்க தேவாலயங்களாகவும் மாற்றப் பட்ட நிகழ்வு இந்த யாழ்ப்பாணத்தில் தான் நிகழ்ந்தது. அவ்வாறு தொடர்ந்து நிகழ இலங்கையின் ஏனைய பிரதேச முஸ்லிம்கள்  அனுமதிக்கக் கூடாது. அதிலும் அகில இலங்கை   ஜம் இயதுல் உலமாவுக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்பும் கடமையும் உள்ளது. 
அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது பல மில்லியன்  ரூபாய்கள்  ஜம் இயதுல் உலமாவால் சேகரிக்கப் பட்டு இந்தியாவுக்கு அனுப்பப் பட்டது. 

இவ்வாறான ஆளுமை படைத்த ஜம் இயதுல் உலமா யாழ்ப்பாண முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு 400 வீடுகளும் ஒரு சில பள்ளிவாசல்கலை மீளமைக்கப் படுவதற்குமான தேவையே உள்ளது. இதற்காக 450 மில்லியன் ரூபாய்களே தேவை.  இது சம்பந்தமான மேலதிக விபரங்கள்  நேரடியாக கலந்துரையாடலாம். 

எனவே முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை பாதுகாக்க ஜம் இயதுல் உலமா தயாராக இருந்தால் அதைப் பற்றி மேலதிக விபரங்களை நேரடியாக பேசிக் கொள்ள முடியும். எனவே அகில இலங்கை ஜம் இயதுல் உலமா இந்த திட்டத்தை முன்னெடுக்கத் தயாராக இருந்தால்   அவர்களின் அமைப்பிலுள்ளவர்களில் யார் யார் இந்த விடயத்தை பொறுப்பெடுத்துச் செய்வார்கள் என்று ஒரு கட்டுரையை ஜப்னா முஸ்லிம் இனையத் தளத்துக்கு அனுப்பி பதிவேற்றுவதன் மூலம் ஏனைய விடயங்களை கலந்துரையாடி  முடிவெடுக்கலாம். 

யாழ்ப்பாண முஸ்லிம்களின் தற்போதைய நிலவரத்தை பின்வரும் பந்திகளில் பார்க்கலாம்.  இனச் சுத்திகரிப்பில் வடமாகாணத்தில் சகல மாவட்டங்களும் பாதிக்கப் பட்டிருந்தாலும்  அதில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் இழப்புத்தான் அதிகம்.  மேலும் 2009 யுத்த முடிவுக்கு பின்னர்   ஏனைய மாவட்டங்களில் 1990 ஆம் ஆண்டு எத்தனை வீடுகள் இருந்தனவோ அதில் 70 சதவிகிதமான வீடுகள் மீளமைக்கப் பட்டுள்ளன. ஆனால் யாழ்ப்பாணத்தில் 170 வீடுகளே கட்டப் பட்டுள்ளன. உடைந்து பாவனைக்கு உதவாத வீடுகளாக 400 வீடுகள் காணபப்டுகின்றன. இவற்றை விட மேலும் 1600 குடும்பங்களுக்கு காணியும் அவற்றில் வீடுகளும் தேவைப் படுகின்றன. 

வீடு கட்டும் பிரச்சினையாயினும் பள்ளிவாசல் சம்பந்தப் பட்ட தேவைகளாயினும் ஒன்றுக்கொன்று தொஅட்ர்புபட்டவையே அவை. பள்ளிவாசல்கள் பாதுகாக்கப் படவேண்டுமாயின் அங்கு முஸ்லிம்கள் மீளக்குடியேற்றப் பட வேண்டும். முஸ்லிம்கள் மீளக் குடியேற வேண்டுமாயின் அவர்களுடைய உடைந்து போயுள்ள வீடுகள் மீளக் கட்டப் பட வேண்டும். காணி இல்லாதவர்களுக்கு காணியும் வீடும் வழங்கப் பட வேண்டும். 

எனவே யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை  போதுமானளவு மீளக் குடியேற்றுவதும்  அவர்களுடைய வீட்டுத் தேவை தொழில் தேவைகள் வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்வது என்பதும் எல்லா முஸ்லிம்களினதும் கடமையாகும்.  ஆனால் அமைப்பு ரீதியில் ஜம் இயதுல் உலமா சக்திவாய்ந்த அமைப்பாகவும் மக்கள் மத்தியில் அறிமுகமான அமைப்பாகவும் இருப்பதால் அவர்கள் முன்வந்து இந்தக் காரியத்தை செய்து தர வேண்டும் என்பதே யாழ்ப்பாண முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும். 

எம்.எஸ். முஹம்மத்

5 comments:

  1. இனவாத கட்டுரை

    ReplyDelete
  2. ரணிலை பாதுகாத்த முஸ்லீம் அரசியல் வீரர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்

    ReplyDelete
  3. பூனைக்கு மணிகட்ட தான் ஆள் பஞ்சம்.

    ReplyDelete
  4. தமிழர்களுக்கு எதிராகவும், மகிந்த வுக்கு ஆதரவாகவும கொழும்பில் ஊர்வலங்கள், கையெழுத்துகள் தமது இலவச வீடுகளை அம்பாந்தோட்டை யில் தரும் படி மகிந்த விடம் கேட்பது தான் நியாயம்

    ReplyDelete
  5. சில நாதாரிங்களுக்கு உரிமைக்கும் இனவாதத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை

    ReplyDelete

Powered by Blogger.