Header Ads



அம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்

அம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூல் வட்சப் குழுமங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

இது ஒரு பொய்யான செய்தியாகும்.

அம்பாறை பகுதியில் ஜயந்திபுர என்ற ஒரு பிரதேசம் இல்லை ஜயவர்ந்தனபுர என்ற சிங்கள பிரதேசமே உள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அம்பாறை பள்ளிவாயல் தலைவர் ரஹிம் அவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது இவ்வாரான ஒரு விடயம் இடம்பெறவில்லை என்றும் அம்பாறை பள்ளிவாயல் மஹல்லாவில் 86 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றன.

இதில் 60 குடும்பங்கள் மலே இனத்தை சேர்ந்த ஜா முஸ்லிம்கள் ஆவர். ஏனைய பதின் ஆறு குடும்பங்கள் அம்பாறையை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம்கள் ஆவர்.

அம்பாறை பிரதேசத்தில் முஸ்லிம் சகோதரிகள் சிங்கள இனத்தவர்களை சேர்ந்தவர்களை திருமணம் முடித்துள்ளதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லையைன பள்ளிவாயல் தலைவர் ரஹிம் என்னிடம் சற்று முன் தெரிவித்தார்.

முஹம்மட் பர்சாத்

1 comment:

  1. போலி அரசாங்கத்தின் சில கூறுகள் நாட்டின் இனவெறி சம்பவங்களை தூண்டும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இது அதிகாரத்தில் நிலைத்திருக்கக்கூடிய ஒரே ஒரு வழி. தந்திரமான நரிகள்.

    ReplyDelete

Powered by Blogger.