Header Ads



பதவியேற்பதற்காக காத்திருந்த ரணில் - மைத்திரி தாமதித்து வந்ததால் ஏற்பட்ட பரபரப்பு


புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.

பிரதமராகப் பதவியேற்பதற்காக, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் 20  முக்கிய பிரமுகர்களுடன், ரணில் விக்கிரமசிங்க அதிபர் செயலகத்துக்குச் சென்றிருந்தார்.

எனினும், சிறிலங்கா அதிபர் வராததால், சிறிது நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால் பெரும் பரபரப்பும் காணப்பட்டது.

எனினும், முற்பகல் 11.17 மணியளவில் வந்த சிறிலங்கா அதிபர்,மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

அதிபர் செயலகத்துக்கு முன்பாக பெருமளவு ஐதேக ஆதரவாளர்கள் திரண்டு நின்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகைக்குத் திரும்பி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

No comments

Powered by Blogger.