Header Ads



அமைச்சர் ஹக்கீம் இப்படி, உடனடியாகச் செய்வாரா...?

இலங்கை அரசியலில்  முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர்  கல்வி தொடர்பான அமைச்சுக்களில் பணியாற்றி உள்ளனர் ,அவர்களில் கலாநிதி, #பதியுத்தீன்_மஃமூத் அவர்களும், ஏ.சி.எஸ் #ஹமீத் அவர்களும் மறக்கமுடியாத சேவை புரிந்தவர்கள் மட்டுமல்ல அவர்களால் அன்று  ஆரம்பித்து வைக்கப்பட்ட பணிகளால் சமூகம் இன்றும் பயன் அடைந்து கொண்டிருக்கின்றது, 

அந்த வகையில் இன்றைய ஐ.தேக. அரசில் மிக நீண்ட காலத்தின் பின்னர் உயர்கல்வி அமைச்சராக, #கௌரவ #றஊப்_ஹக்கீம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள், அதனை வரவேற்பதுடன்,  ஏனைய அமைச்சுக்களைப் போல உயர்கல்வி அமைச்சும் அதன் செயற்பாடுகளும்  "இலாபகரமானதாக" இல்லாவிடினும் நாட்டிற்கான முக்கிய பொறுப்புள்ள அமைச்சுக்களில் ஒன்றாகும், இது இன்றைய அரசை மீண்டும் கொண்டு வருவதற்காக முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து போராடியதற்கான பரிசாகவும் இருக்கக் கூடும், 

#முஸ்லிம்_பிரச்சினைகள்,

இலங்கை முஸ்லிம்களின் பிரதான பிரச்சினைகளில் முக்கியமானது அவர்களது #இருப்பிற்கான பிரச்சினையாகும், இப்பிரச்சினை ஏனைய எல்லாப் பிரச்சினைகளுக்குமான அடிப்படையாகவும் உள்ளதுடன், #நிலப்பிரச்சினை, #தேசியத்திற்கான_முஸ்லிம்_பங்களிப்பு  என்பனவற்றிற்கான ஆதாரங்களுடன் தொடர்புபடுகின்றது, 
இவ்வாறான பிரச்சினைகளின்போது தமது பக்க நியாயங்களை முஸ்லிம்கள் முன்வைப்பதற்கான ஆதாரங்கள் போதுமான அளவில்உள்ளபோதும், அதனை உறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலையை எதிர்
கொள்கின்றனர் அதில் முக்கியமானதே #தொல்பொருள்_ஆய்வு_ஆதாரங்கள்(Archeological proofs) தொடர்பான பிரச்சினையாகும்,

#தொல்பொருள்_ஆதாரங்கள் 

இலங்கையில் முஸ்லிம் இருப்பு தொடர்பான பல ஆதாரங்கள் உள்ளபோதும், அதனை நிறுவுவதில் பல பிரச்சினைகள்உள்ளன, மட்டுமல்ல அது தொடர்பான அறிவும் ,ஆளணிப்பற்றாக்கு றையும் இருப்பதனால் அவற்றினை நிறுவுவதில் சிக்கல் நிலை உண்டு, மட்டுமல்ல இலங்கையில் கண்டு பிடிக்கப்படும் தொல்லியல் ஆதாரங்கள் "பௌத்த மயப்பட்டதாகவே, விளக்கப்படுகின்றன, இதன்மூலம் நாட்டின் பல பிரதேசங்களில் முஸ்லிம்கள் தமது நிலங்களை இழப்பதுடன், அன்றாட வாழ்வியலிலும் பல சட்டரீதியான   பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர், 

#என்ன_செய்யலாம்?? 

இலங்கைப்பல்கலைக்கழகங்களில் தொல்லியல் தொடர்பான கற்கை நெறிகள் பெரும்பாலும் சிங்கள மொழி சார்ந்த்தாகவே அமைந்துள்ளதுடன், அவை பௌத்த மத, ஆதாரங்களையே முதன்மைப்படுத்துகின்றன, 

அதே போல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொல்லியல்துறை தமிழ் மக்களின் மரபு ரீதியான ஆதாரங்களை நிறுவுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுகின்ற அதேவேளை, தமிழர்களுடைய இருப்புக்கு எதிரான " சிங்கள தொல்லியல் சார் ஆதாரங்களுக்கான பதில்களை வழங்குவதிலும்  அதிக அக்கறை கொண்டிருப்பதனால் முஸ்லிம்களின் ஆதார நிரூபணங்களில் குறித்த சிங்கள, தமிழ்,  செயற்பாட்டாளர்கள் அதிக அக்கறை கொள்வதில்லை, எனவேதான் முஸ்லிம்களின் தொல்பொருள் சார் நிரூபணங்களை ஆராய்வதற்கான அறிவும், ஆளணியும் இன்றைய நிலையில் அவசியமானதாகும், இதுபற்றி முஸ்லிம் தலைவர்களும், புத்தி ஜீவிகளுமே சிந்திக்க வேண்டும்..

#எந்த_இடம்_பொருத்தம், ??

இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கக்கூடிய அறிஞர்களையும், அது தொடர்பான #கருத்தியலையும்(Ideology) உருவாக்கும் நோக்கிலேயே, இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்(SEUSL) கலாநிதி அஷ்ரஃப் அவர்களால் உருவாக்கப்பட்டது, 
அதன் உருவாக்க காலத்தில் அட்டாளைச் சேனையில் ஒரு முஸ்லிம் #அருங்காட்சியம் ஒன்றும் மறைந்த தலைவரால் உருவாக்கப்பட்டது, இவை இரண்டிற்குமிடையேயான தொடர்பினை விளக்குகின்றது, 

எனவேதான் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தில் ஒரு "#தொல்லியல்துறை(Archeology Department) அவசரமாக உருவாக்கப்படவேண்டும், அதுவே கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டு முஸ்லிம்களும் தமது வரலாற்றையும், இந்நாட்டிற்கான தேசிய பங்களிப்பையும் இந்நாட்டின்அரசுக்கும்,  ஏனைய இன மக்களுக்கும் ஆதார பூர்வமாக முன்வைப்பதற்கான சிறந்த  வாய்ப்பாக அமையும், மட்டுமல்ல  அன்றாடம் அழிந்து செல்லும் முஸ்லிம் வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாக்கவும் உதவும்.

#ஹிஸ்புள்ளாஹ்வின்_பாரிய_பணி, 

இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளில் கலாநிதி ,ஹிஸ்புள்ளாஹ் அவர்களின் எண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள #பூர்வீக_நூதனசாலை ( Heritage Museum),மதிப்பிடமுடியாத பெரும் சேவையாகும், மட்டுமல்ல தமது வரலாற்றை தாமே மறந்துள்ள முஸ்லிம்கள் மத்தியில் அவர் மேற்கொண்டுள்ள பணி,பாராட்டப்படவேண்டியது மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான வருடங்கள் வாழக்கூடிய ,எம் எதிர்கால சமூகத்திற்கு பிரயோசனமான பணியாகும், 

அது போலவே #அமைச்சர்_ஹக்கீம் அவர்களும் இவ்வாறான ஒரு பணியை தனது பதவிக்காலத்தில்  மேற்கொள்ளுவாராயின், அது இலங்கை முஸ்லிம்வரலாற்றில் அவரது பெயரை அழிக்க முடியாமல் நிலைத்திருக்கச்   செய்துவிடும் என்பதில் ஐயமில்லை, 

#ஏனையதுறை_வேறுபாடு, 

தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சட்டம், வைத்தியம், விவசாயம், போன்ற பல பீடங்களின் தேவை அவசியமானாலும், அவை ஏனைய பல்கலைக்கழகங்களில் மிகச்சிறப்பாக இயங்குகின்றன, என்பது மட்டுமல்ல, அவை ஒரு பொதுச் சேவையாகவே பணியாற்றக் கூடிய துறைகளாகும், ஆனால் தொல்லியல்சார்துறை இதுவரை இலங்கை #முஸ்லிம்களின் #பங்குபற்றுதல் இல்லாத  வெற்றிடமாக  உள்ள அதேவேளை இன்றைய முஸ்லிம்களின் பல பிரச்சினை களுக்கான தீர்வுகளையும் கொண்டுள்ள துறையாகும், 

எனவேதான் முஸ்லிம் கட்சியின் தலைவராக உள்ள , புதிய உயர்கல்வி அமைச்சர் இது தொடர்பாக அதிக அக்கறை கொள்வதுடன் , சமூகத்தில் உள்ள இத்துறைசார் ஆர்வமுள்ள புத்திஜீவிகளுடனும், அரசியல் அதிகாரமுள்ளவர்களுடனும்,  கலந்து ஆராய்ந்து அவசரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே என்போன்ற பலரின் ஒருமித்த கருத்தாகும், 

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA. 

3 comments:

  1. தற்போதைய முஸ்லீம் அரசியல்வாதிகளில் உயர்கல்வி அமைச்சுப் பதவியை முஸ்லிம்களுக்கு பயன்தரக்கூடியதாக சேவை செய்வதட்கு பொருத்தமானவராக ஹிஸ்புல்லா அவர்களை சுட்டிக்காட்ட முடியும்

    ReplyDelete
  2. Very Needful Article. Hope this message will go to Mr. Hakeem and will do the best for our future in archaeology sectors..

    ReplyDelete
  3. Government and ministry have very short life period and new cabinet formed under political crisis still a clear solutions not found it may continue
    The information contained here very important history of Muslim's in Sri Lanka and its documental proof and other related studies as learned wtiter highlighted should be given attention by our Muslim leadership
    Leader of Muslim congress and a able minister is appointed as higher education minister.He has contributed a lot for our community . We should utilise this opportunity without any delay as we from the day of independence in all communal troubles repeatedly some individuals and communal organisations telling Muslim community have history for short periods and their contribution to mother Lanka marginalised or not given its merit
    Its a valued suitable immediate suggestions to have separate study unit in SEUSL Oluwil

    ReplyDelete

Powered by Blogger.