Header Ads



எனக்கு பிரதியமைச்சு பதவி கிடைக்காவிட்டால், ரணிலுடன் கோபம் வரும் - மரிக்கார்

தனக்கு பிரதி அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படாவிடின் பிரதமருடன் கோபம் வரும் எனவும், அவசியம் தான் அதனை எதிர்பார்ப்பதாகவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

ஊடகங்களிடம் இன்று கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

கட்சியின் உயர் பதவியிலுள்ளவர்களுக்கு கஷ்டமான சூழ்நிலை வரும்போது தவறுகள் விளங்க ஆரம்பிக்கும். கஷ்டத்திலிருந்து மீண்டு விட்டதும் மூளை இல்லாத நிலைமை ஏற்பட்டு விடுகின்றது.

உண்மையான செய்தியை நான் ஊடகங்களிடம் தெரிவிக்கின்றேன். இன்னும் பிரதி அமைச்சுப் பதவிகள் 13 வழங்கப்படவுள்ளன. இதனைப் பெற்றுக் கொள்ள, கட்சியில் அமைச்சுப் பதவி கிடைக்காதவர்களிடையே பெரும் போட்டி நிலைமையொன்று உருவாகியுள்ளது.

எனக்கு கட்சியில் எந்தவித அதிருப்தியும் இல்லை. ஆனால், பிரதி அமைச்சுப் பதவியொன்றாவது வழங்கப்படாவிடின் நிச்சயம் எனக்கு கோபம் வரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

1 comment:

  1. Dear Mr. Marikar, your leader has not learnt the lesson yet. He is still surrounded by the old folks. Old folks already have enjoyed the privileges for last 3 years and some old foxes are not happy with the Ministries and departments coming under their purview on the recent appointments. It is now time for youngsters and you have the right to ask for it and Mujibur Rahuman too have a claim because you all were instrumental facing the media and the public during political turmoil period instituted by the President.

    ReplyDelete

Powered by Blogger.