Header Ads



ரணிலுக்காக நேர்த்திக்கடன், வைத்த ஹிருணிக்கா


நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர கண்டி ஸ்ரீ தளதா மாளிகைக்கு சென்று அவரால் வைக்கப்பட்ட நேற்றிகடனை நிறைவேற்றியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்பட்டால், தலதா மாளிகைக்கு வந்து நேற்றிகடன் நிறைவேற்றுவதாக நேற்றி கடன் வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் தலதா மாளிகைக்கு சென்ற பிரதமர் தனது நேற்றி கடனை நிறைவேறறியதாக ஹிருணிக்காக குறிப்பிட்டுள்ளார்.

ஹிருணிக்கா தலதா மாளிகைக்கு வருகைத்தர சற்று தாமதமாகிய நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பூஜை வழிப்பாடுகளை நிறைவேற்றிவிட்டு வெளியேறும் வரிசையில் நின்றுள்ளார். இதனை அவதானித்த ஹிருணிக்காக தனது பூஜை பொருட்களை பிரதமரிடம் வழங்கியுள்ளார். அதனை பிரதமர் கை வைத்து வணங்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மலிக் சமரவிக்ரம மற்றும் லக்ஷ்மன் கிரிஎல்ல ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர்.

பிரதமர் கை வைத்து வணங்கிய பின்னர் புத்தர் சிலைக்கு பெரிய மாலை ஒன்றை அணிவித்துள்ளார்.

பிரதமருக்காக தன்னால் வைக்கப்பட்ட நேற்றிக்கடன் நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்களுக்கு ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.