Header Ads



பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்த, ஒரேநபர் மஹிந்ததான்

தானாக முன்வந்து பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்தமையினால் மஹிந்த ராஜபக்ஷ வரலாற்றில் இணைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்த ஒரே நபர் மஹிந்த ராஜபக்ச தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டலஸ் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் 15 பேர் பிரதமராக செயற்பட்டுள்ளனர். அந்த 15 பேரில் ஒருவர் கூட தாமாக முன்வந்து பிரதமர் பதவியை தியாகம் செய்யவில்லை.

தனது பதவியை தானமாக வழங்கிய எங்கள் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஒருவர் மாத்திரமே. அதன் ஊடாக அவர் இலங்கையின் வரலாற்றில் இணைந்துள்ளார்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மஹிந்த தனது பதவியை விட்டு கொடுத்துள்ளார். அதனாலேயே அதற்கான சிறந்த வார்த்தையாக தானம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. வரலாற்றில் எழுதும் போது அவர் எவ்வாறு பிரதமர் ஆனார் என்பதையும் எழுதினால் வரலாறே நாறும்.

    ReplyDelete
  2. மகிந்த பதவி விலக வேண்டிய தேவையே இல்லை ஏனெனில் அவர் கடந்த சனிக்கிழமை பதவி விலகும்போது அந்த பதவி அவரிடம் இருந்து நளிவு விட்டது. ஒருசந்தர்ப்பத்தில் அது பறிக்கப்பட்டும்
    விட்டது. மற்றுமொரு சந்தர்ப்பத்தில்
    நீதி மன்றம் அதற்கு தடையும் விதித்துள்ளது.இந்த நிலைகளுக்கு
    முன் அவர் ராஜினாமா செய்திருந்தால்
    டலஸ் அழகப்பெருமாளின் கனவு நிஜமாகி இருக்கலாம்.நாடும் இவ்வளவு சிக்கலுக்குள்ளும் அகப்பட்டிருக்காது.அதை விடுத்து
    டலஸ் அவர்களின் கூற்று சிறுபிள்ளைத்தனமானது.

    ReplyDelete

Powered by Blogger.