Header Ads



"வதந்திகளைப் பகிர்ந்து, மக்களை குழப்பமடையச் செய்ய வேண்டாம்" (மாவனெல்லை சம்பவம்)


-Safwan Basheer-

"மாவனெல்லை சம்பவம்"

இப்படியான சிறிய சம்பவங்களுடனேயே பெரும் இனக்கலவரங்கள் ஆரம்பமானது என்பதுதான் வரலாறு தயவு செய்து "Breking News,"அவசரமாக பகிரவும்" 

வகையான பதிவுகளை பகிரும் அவசரத்தில், வதந்திகளைப் பகிர்ந்து மக்களை குழப்பமடையச் செய்துவிட வேண்டாம்

இப்போதே இனவாத பேஸ்புக் பக்கங்கள் இந்த சம்பவத்தை தமக்கு சதாகமாகப் பயன்படுத்தி ஒரு இனவாத அலையை சமூகவலைத்தளங்களில்உ ருவாக்க முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.

அந்த பேஸ்புக் பக்கங்களில் போய் நம்மவர்களும்,   தமது வீரத்தை காட்டாமல் நிதானமாக இருப்பது எல்லோருக்கும் நல்லது.

முடிந்தால் அப்படியான இனவாத பக்கங்களை எல்லோரும் சேர்ந்து Report செய்து முடக்க முயற்சி செய்யலாம்.

விகாரையில் திருட்டு நடப்பது, புதையல் தோண்டுவது,சிலைகள் திருடப்படுவது,உண்டியல் திருடப்படுவது, சிலைகள் காணமல் போவது இப்படி நிறைய சம்பவங்கள் நாட்டில் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறன.

மாவனெல்லையில் புத்தர் சிலை ஒன்று தாக்கப்பட்ட சம்பவமும், இப்படியான ஒரு சம்பவம்தான்.

இதை இலங்கையின் முஸ்லிம் சமூகத்தோடு ஒரு முரண்பாட்டை உருவாக்கி ஒரு இனமோதலை உருவாக்க ஒரு போதும் இடமளிக்கக்கூடாது.

இப்படியான சந்தர்ப்பங்களில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும்போது நாம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

நம் அரசியல்வாதிகள் எல்லாம் முடிந்த பிறகு அறிக்கைவிடுவதையோ, பாரளுமன்றத்தில் காரசாரமாக உரை நிகழ்துவதையோ பார்த்து, பூரிப்படையும் நிலையில் மக்கள் இல்லை.

ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடக்கவிடாமல் அரசாங்கத்துக்கும், பாதுகாப்பு பிரிவுக்கும் அழுத்தம் கொடுப்பதையே நம் அரசியல் வாதிகளிடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மீண்டும் ஒரு இனக்கலவரம் நடந்துவிடாமல் இந்த நாட்டையும், மக்களையும் இறைவன் பாதுகாக்க வேண்டும்.

1 comment:

  1. මාවනැල්ලේ බුදුපිළිම කැඩු 7 ක් අත්අඩංගුවට
    ඉන්දිකා රාමනායක

    මාවනැල්ල හා අවට ප‍්‍රදේශ කිහිපයක බුදු පිළිම කිහිපයකට පහර දී අනර්ථය සිදුකිරීමේ සිද්ධිය සම්බන්ධයෙන් මේ වනවිට සැකකරුවන් හත්දෙනකු අත්අඩංගුවට ගෙන ඇති බව පොලිස් මාධ්‍ය ප‍්‍රකාශක පොලිස් අධිකාරි රුවන් ගුණසේකර මහතා පැවසීය.

    අත්අඩංගුවට ගත් එම සැකකරුවන් හය දෙනෙක් මාවනැල්ල මහේස්ත‍්‍රාත් අධිකරණයට වෙත ඉදිරිපත් කිරීමෙන් පසු ලබන 02 දින දක්වා රිමාන්ඞ් බාරයට පත් කළ බවද රුවන් ගුණසේකර මහතා කියා සිටියේය.

    මෙම සිද්ධිය සම්බන්ධයෙන් පොලිස්පතිවරයාගේ නියමයෙන් පුළුල් විමර්ශනයක් ආරම්භ කර ඇති බවත් සිද්ධිය සැලවීමත් සමඟ පොලිස්පතිවරයා අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ විශේෂ පොලිස් කණ්ඩායමක් එම ස්ථානයට පිටත් කළ බවද රුවන් ගුණසේකර මහතා කියා සිටියේය.

    මෙම අනර්ථ සිදුකරන අවස්ථාවේ දීම ප‍්‍රදේශ වාසීන් විසින් අත්අඩංගුවට ගෙන සිටි තරුණයාගෙන් දීර්ඝ ලෙස ප‍්‍රශ්න කිරීමේ දී හෙළි වු තොරතුරු අනුව සෙසු සැකකරුවන් පිරිස අත්අඩංගුවට ගත් බවද රුවන් ගුණසේකර මහතා සඳහන් කළේය.

    තවත් සැකකරුවන් දෙදෙනකු අත්අඩංගුවට ගැනීමට නියමිත බවත් ඔවුන් ප‍්‍රදේශයෙන් පලාගොස් ඇති බවද පොලිසිය කියයි.
    සිද්ධියෙන් පසු ප‍්‍රදේශ තුළ සාමය පවත්වාගෙන යාම සදහා පොලිස් හා විශේෂ කාර්ය බලකාය යොදා ආරක්ෂාව තරකර ඇත.

    ReplyDelete

Powered by Blogger.