Header Ads



இலங்கையில் தொடர்ந்து முதலிடத்தில், ஜப்னா முஸ்லிம் இணையம்

சர்வதேச அலஸ்கா இணையத் தரப்படுத்தல் வரிசையில், இலங்கை முஸ்லிம் சார்பு இணையங்களின் பட்டியலில், ஜப்னா முஸ்லிம் இணையம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)

18-12-2018 ஆகிய இன்றைய தினத்தில், இலங்கை முஸ்லிம் சார்பு இணைய வரிசையில் 332 ஆவது பட்டியலில் www.jaffnamuslim.com உள்ளது.

அதாவது  இலங்கை முஸ்லிம்கள், மிக அதிகமாக பார்வையிடும் இணையங்களின் வரிசையில் முதலிடம் கிடைத்துள்ளது.

அதேபோன்று ஓமானில் 557 இடத்திலும், கட்டாரில் 659 ஆவது இடத்திலும், சவுதியில் 2624 ஆவது இடத்திலும் ஜப்னா முஸ்லிம் இணையம் உள்ளது.

அத்துடன் வாசர்களின் தொடர் ஒத்துழைப்புக்கு நன்றி.

மேலும் ஆரோக்கியமானதும், நாதரிகமானதுமான விமர்சனங்களை ஜப்னா முஸ்லிம் இணையம் வரவேற்கிறது.

தவறுகள், பிழைகள் சுட்டிக்காட்டப்படும்போது அவற்றை திருத்திக்கொள்ளவும், தேவையானவிடத்து மன்னிப்புக் கேட்கவும் ஜப்னா முஸ்லிம் இணையம் தயாரென்பதையும் இங்கு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தொழில்சார் ஊடகத் தகைமைகளுடன் இயக்கப்படும், ஜப்னா முஸ்லிம் இணையம்  இலங்கை முஸ்லிம்களின் குரலாக ஒலிப்பதில் மகிழ்வடைகிறோம். 

12 comments:

  1. வாழ்த்துக்கள், தயவு செய்து நாகரீகமான கட்டுரைகளையும் விமர்சனங்களையும் மட்டும் பதிவிடுங்கள். அத்தோடு இனங்களைச்சுட்டி எழுதப்படும் கட்டுரைகள் விமர்சனங்களை செம்மைப்படுத்தி வௌியிடுங்கள். நன்றி

    ReplyDelete
  2. ஜப்னா முஸ்லிம் இணையத்துக்கும் அதனைத் திறம்பட இயக்கும் ஊடகவியலாளர் அன்ஸிருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!



    ReplyDelete
  3. Happy to see May Allah bless you and your team of your company

    ReplyDelete
  4. நிமிர்ந்து நிற்கும்jaffnamuslim.com இனையத்திற்கு எமது மன பார்த்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. முஸ்லிம் சார்பு இணையம் என்ற அடிப்படையில் இலங்கை நாட்டின் கௌரவ குடிமக்களாக நாம் மேலும் எமது பங்களிப்பை எவ்வகையில் உயர்த்த முடியும் போன்ற சமூக விழிப்புணர்வுக் கட்டுரைகளையும் அதிகப்படுத்த எனது சிறிய ஆலோசனையையும் குறிப்பிடுகின்றேன். அல்ஹம்துலில்லாஹ், தொடர்ந்தும் வெற்றிகள் சூட வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  6. மாஷா அ ல்லாஹ்
    வரவேற்க்கத்தக்க செய்தி இலங்கை முஸ்லீம்களது நல்ஆதரவைப் பெற்ற உண்ணதமான ஜப்னா முஸ்லிம் எனும் இணையதளத்தின் வளர்ச்சிக்கு எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
    குறிப்பாக நீர்கொழும்புப் பிரதேசத்தின் கம்மல்துரை / போருத்தொட்டை எனும் எமது ஊர்சார்ந்த விடயங்களையும் இந்த இணையதளத்தினூடாக வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு எட்டிடச்செய்த பெறுமையும் ஜப்னா முஸ்லிம் இணைய தளத்துக்கே உண்டு . சகோதரர் அன்ஸிர் அவர்களது பங்களிப்பு பாராட்டத்தக்கது
    m faiseen
    poruthota 👏👏🤝

    ReplyDelete
  7. அல்ஹம்துலில்லாஹ்,உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பதில் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்திற்கு நிகர் வேறு எதுவும் இல்லை. உங்கள் சேவை மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Powered by Blogger.