Header Ads



"முஸ்லிம்கள் இந்த நிலைப்பாட்டையே, எடுக்க வேண்டும்" - ஹஜ்ஜுல் அக்பர்

நேர்காணல்: ஹெட்டி ரம்சி

 பெரும்பாலான முஸ்லிம் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி ரணில் தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பிட்ட சில அமைப்புக்களே மஹிந்தவுக்கு ஆதரவு நல்கியுள்ளது. இது முஸ்லிம்களுக்கு எவ்வாறான பின்விளைவுகளை ஏற்படுத்தும்?

அதாவது முஸ்லிம்கள் இங்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்பதை ஒரு இன ரீதியான விடயமாகப் பார்க்காமல் தெளிவானதொரு நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டியதொரு தேவையுள்ளது. அரசியல்வாதிகள் அப்படித்தான் பேச வேண்டும். இது ரணிலுக்கு ஆதரவளித்து மஹிந்தவுக்கும் ஜனாதிபதிக்கும் நாங்கள் எதிராக உள்ளோம் என்ற நிலைப்பாட்டில் நாம் இவ்விடத்திற்கு வரவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.

சுதந்திரத்திலிருந்து இன்று வரையில் இந் நாட்டை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே ஆட்சிசெய்கிறார். எனவே ஒவ்வொரு சிறுபான்மை சமூகமும் தனக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் சாத்வீகமாகச் செல்வதென்பது புறக்கணிக்க முடியாததொரு விடயம். ஆனால் இந்தப் பிரச்சினையில் நாம் அவர்களுடன் நிற்பதா? அல்லது இவர்களுடன் நிற்பதா? என்கின்ற நோக்கில் இதனைப் பார்க்கக் கூடாது. இங்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்ற கொள்கையிலேயே செயற்பட வேண்டும்.

இன்று நீதிமன்றத்திலும் பிரச்சினை, பாராளுமன்றிலும் பிரச்சினை அதாவது ஜனநாயக மரபுகள் கருத்திற் கொள்ளப்பட்டு இம்மாற்றம் நடந்ததா இல்லையா என்று பார்க்கப்பட வேண்டும். இது யாப்பனர்த்தம் (Constitutional Crisis)  என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினைகள் சட்டம், யாப்பு, ஜனநாயகம் போன்றவற்றை மையப்படுத்தியே பேசப்படுகின்றது. எனவே நாம் இத்தகைய விழுமியங்களுக்கு முன்னுரிமையளித்தே இத்தகைய நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். இந்த அடிப்படையிலேயே எமது சமூகத்தை அறிவூட்டும் விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில் மஹிந்த ஜனாதிபதியாக இருந்த நேரம் நாட்டில் எமக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்தது. எனவே நாம் அவர் பக்கம் சேரக் கூடாது என்கின்ற நிலைப்பாட்டில் முஸ்லிம்கள் இப்பிரச்சினையில் தலையிடக்கூடாது. இது வேறொரு விடயம். இது முக்கியமல்ல. இந்நாட்டில் யாரோ ஆட்சி செய்வார்கள்.

இது ஜனநாயகத்தோடு தொடர்பான பிரச்சினை. எனவே எல்லோரது குரலும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அமைப்பிலேயே ஒலிக்க வேண்டும். முஸ்லிம்கள் இந்த நிலைப்பாட்டிலேயே இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். இது தான் எங்களது நிலைப்பாடு என முஸ்லிம்கள் இதை அழுத்திச் சொல்வார்கள் என்றால் அதுவே இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற கௌரவமாகும்.

தற்போது நாம் நாட்டுக்காகப் பேசுகிறோம். சமூகத்துக்காக அல்ல. இது நாட்டிற்காகப் பேசுகின்ற நேரம். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்களுக்கு எதைச் சாதித்துக்கொள்ள முடியும் என்று நினைக்கக் கூடாது. இதற்கு முன்னர் இடம்பெற்ற பிரச்சினைகளை விட இந்த விடயத்தில் முஸ்லிம் கட்சிகள் நல்லதொரு நிலைப்பாட்டில் இருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டில்  சட்டம், ஒழுங்கு ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவொரு ஜனநாயக நாடு. இந் நாட்டிற்கு உலகில் தனியான அந்தஸ்துள்ளது. இதைப் பாதுகாக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். இப்படியொரு நிலைப்பாட்டையே முஸ்லிம்கள் எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கையிலுள்ள இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டாகச் சேர்ந்து பணியாற்ற வேண்டியதன் தேவை குறித்து உங்களது அவதானங்களை தெளிவுபடுத்த முடியுமா?

இப்படியானதொரு முன்னெடுப்பு இல் லையென்பது கவலையான விடயம். ஒரு அனர்த்தம் வரும் போதே இயக்கங்கள் பொதுவாக இணைந்து வேலைசெய்யும் தோற்றப்பாடு வருகின்றது. பாதிப்பொன்று வந்தால் நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து விட வேண்டும் என்கின்ற மனநிலையே இயக்கங்களிடம் காணப்படுகிறது. தற்போதைய அரசியல் நெருக்கடியை நாம் பேரின சமூகத்தவர்களின் அதிகாரப் போராட்டம் என்பதாக மாத்திரமே நோக்குகிறோம். நாட்டை முன்னிலைப்படுத்தி அந்தப் பிரச்சினையை பார்ப்பதில்லை. நாட்டை மையப்படுத்தி யோசிப்பவர்களுக்கே இந் தப் பிரச்சினையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்ற மனப்பாங்கு வருகிறது. தமிழர்கள் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாகவும் உரிமை அரசியல் குறித் தும் பேசுகிறார்கள். முஸ்லிம்கள் காலா காலமாக தனித்துவ அரசியல் என்று முஸ்லிம் அரசியல் ஒன்றை வளர்த்துள்ளார். இயக்கங்கள் தங்களுக்கென இஸ்லாம் சார்ந்த நலன்கனை வகுத்துச் செயற்படும் போக்கை காண்கிறோம். இதற் கிடையில் அனர்த்தம் என்று வரும் போது இணைந்து செயற்படுவது பற்றி யோசிக்கிறோம். இங்கு சமூகத்திற்கு ஒரு பிரச்சினை வருகிறது என்கின்ற பார்வையின் விளைவாகவே இந்த இணைவு தொடர்பில் யோசிக்கிறோம். சாதாரண நிலைமைகளில் இயக்கங்கள் அவையவை வகுத்துக் கொண்ட இஸ்லாமிய நலன்களை மையப்படுத்தியே செயற்படுகின்றன.

அனர்த்தம் வராதவரையில் இயக்கங்கள் நாட்டில் இடம்பெறும் பிரச்சினைகள் குறித்து சிந்திப்பது குறைவு. எனவே எமக்கு மத்தியில் மனநிலை மாற்றம் இடம்பெற வேண்டும். நபிமார்களின் பணிகளில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று நாட்டு மக்களின் நலன்களை கவனித்துள்ளார்கள். இரண்டாவது அவர்களு டைய தஃவாவை மேற்கொண்டுள்ளார்கள். நபிமார்களின் ஒரு பக்கத்தையே நாம் எடுத்துக்கொண்டுள்ளோம். நபிமார்கள் தமது தேசத்தின் இயற்கை வளர்ச்சி, பாதுகாப்பு குறித்து சிந்தித்தவை எமது மனங்களில் இல்லை. அது இஸ்லாமாகப் படுவதில்லை. அனர்த்தங்களின் போது மாத்திரம் இணைந்து செயற்பட்டு விட்டு அதனை தொடர்ந்து நாம் எமது இடங்களுக்கு வருகின்றோம். இதனால் எமக்கு தொடர்ந்து வேலைசெய்ய முடியாமல் உள்ளது. தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென்றால் அந்த வேலைக்குப் பின்னால் இப்படியொரு பார்வை வர வேண்டும். அதாவது, எமது நாட்டு நலன்கள், மக்க ளின் விடயங்களை கவனிப்பது இஸ்லாமிய பணிகளில் ஒன்று, இது நபிமார்களின் பணி என்பதை சிந்திக்க வேண்டும்.

சூரா மும்தஹினாவின் 8ஆவது வசனத்தில் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். “மார்க்கத்தை காரணமாக வைத்து உங்களுடன் போராடாதவர்கள், அதைக் காரணமாக வைத்து வாழ்விடங்களில் இருந்து உங்களை வெளியேற்றாத வர்களுடன் நீங்கள் எவ்வளவு நன்றாக நடக்க முடியுமோ அவ்வளவு நன்றாக நடந்து கொள்ளுங்கள், அவர்களுடன் நீதியாகவே உங்களுடைய விடயங்களை கையாளுங்கள்” யூசுப் அல்கர்ளாவி முஸ்லிமல்லாதவர்களுடனான உறவுக்கோர் சாசனம் என இந்த வசனத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த மனநிலை இல்லாததால் இயக்கங்களுக்கு இடையில் இணைந்த போக்கு இல்லை.

5 comments:

  1. The second answer reflect usthaz poor knowledge of muslim organisation activities. He is well enough to deliver ideas but never seen any field work.

    ReplyDelete
  2. Muslim community as a minority community do not have that much of power to change the political destiny in this county or for that matter in any minority context.. In India, there are 150 million Muslim but they can not anything except to bow down to Hindu power politics... In any matured democratic traditions such as western countries..there is no problem all are treated equally as rule of law demands... In Sri Lanka we with all minorities should work hard to establish democratic traditions, rule of law.. in order to build this nation beyond racial limits.. We always think in a racial lines that is wrong? Do we have some thing called Tamil money? Sinhalese money? Muslim money? no.. so, all community should work to strengthen Sri Lankan rupees so that all can benefit...

    ReplyDelete
  3. ஹஸ்ரத் அவர்களுடைய கூற்றுக்கள் சிந்திக்க தகக்கவையாகும்.இங்கு நாங்கள் இவரை ஆதரிப்பது அல்லது அவரை ஆதரிப்பது அல்லது இந்தக்கட்சியை நியாயப்படுத்துவது
    அல்லது அந்தக்கட்சியை வசைபாடுவது
    என்பவைகளுக்கு அப்பால் அவர்களின் ஆட்சி முறைமைகளும் அதில்உள்ள அம்சங்களும் இன மத பிரதேச பேதமின்றி எல்லா மக்களுக்கும் ஒரே
    வகையான நீதி நியாயங்களையும் ஜனநாயக தன்மைகளையும் வழங்குவதில் அதிக அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ளதா என்பதை கவனத்தில் கொண்டு அவ்வாறான ஆட்சிமுறைமைகளுக்கு
    மேலும் வலுசேர்த்து உரமூட்டி அதை
    மேலும் வளர்ப்பதற்கான வழிமுறைமை
    களை முன்வைப்பதை மக்களும் அரசியல் வாதிகளும் கைக்கொள்ளாமல் தனிநபர்களுக்கோ அல்லது கட்சிகளுக்
    கோ வால்பிடிப்பது அவர்களின் தனிப்பட்ட நலன்களை அடைந்து கொள்வதற்காகவே அன்றி தான் பிரதிநிதித்துவ படுத்தும் மக்களினதோ
    அல்லது நாட்டின் பொதுவான நலனோ
    இல்லை என்பதை நாம் உணரும் பட்சத்தில்தான் சிறந்த தலைமைகளை
    நாம் இனங்காணமுடியும். உருவாக்க முடியும் மாறாக நாமும் சுயநலமாக சிந்திப்போமாக இருந்தால் அவர்கள்
    சொல்வது செய்வது எல்லாம் எம்கண்ணை மறைத்து அவர்களை
    நியாயப்படுத்த வெளிக்கிட்டால் நல்ல
    தலைவர்களை எப்படி உருவாக்குவது,
    அல்லது இனம்காண்பது?
    எனவே இந்த நாட்டுமக்களாகிய நாம்
    எங்களுடைய தனிப்பட்ட சுயநலன்கள்
    பிரதேச வாதங்கள் இனவாதங்கள் விட்டு நாட்டினுடைய எல்லா மக்களு் சமத்துவமான முறைரயில் வாழவேண்டும் என்ற அடிப்
    படையில்சிந்திப்பேகமாகஇருந்தால்
    அதனால் உருவாகும் அரசும் சிறப்புற
    கருமமாற்றும்..ஏனென்றாலல் அரசாங்கத்தையும் அதன் உறுப்பினர்க
    ளையும் தெரிவு செய்வது நாம்தானே.
    இவைகள் சாத்தியமில்லை என பலர்
    வாதிடலாம்.ஆனால் முஸ்லீம்கள்
    இதிலிருந்து நளுவக்கூடாது இது அவர்களின் மார்கத்தோடு கலந்தவிடயமாகும்.

    ReplyDelete
  4. Acju and other muslim moments they are trying to bring peace and unity with diversity.indha allah sheik ajjul akbar also can join with them.doors are open 24hours.

    ReplyDelete
  5. During MRs rule we Muslims faced numerous difficulties for the reasons they were born as Muslims . If you followed news his speaches almost daily Sinhala media how he indirectly induce communal feelings. Even in his statement this week he says onn division of country constitutional amendments going to separate country whereas without his support two third impossible it will never happened
    As very popular respected people s leader still his thoughts not as statesman but ordinary politicians

    ReplyDelete

Powered by Blogger.