Header Ads



ஜனாதிபதிக்கு நேற்று, பதில் கூறமுடியாமல் போன கேள்வி

ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பின் போது பல விடயங்கள் தொடர்பில் மனம் விட்டு பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - முகத்துவாரம் இந்துக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த சந்திப்பில் சில முடிவுகள் எட்டப்பட்ட போதும், சில முடிவுகள் இன்னும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய தேசிய முன்னணிக்கே பெரும்பான்மை இருப்பதை ஜனாதிபதி ஒத்துக்கொண்டுள்ளார்.

அடுத்ததாக நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை திரும்பப்பெறுவதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்ற ஒரு கட்சி தங்களது பிரதமர் தெரிவுக்கான யோசனையை முன்வைக்கும் போது அதை தட்டிக்கழிப்பதற்கு அதிகாரம் இருக்கின்றதா என்ற கேள்விக்கு ஜனாதிபதியால் பதில் கூற முடியவில்லை.

எனினும் உங்கள் கட்சியிலிருந்து ரணில் அல்லாத ஒருவரை பிரதமர் பதவியில் அமர்த்துவதாக இருந்தால் அது குறித்து தாம் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் நாளை மீண்டும் ஒரு சந்திப்பு நடத்த உள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.