Header Ads



A/L பரீட்சை முடிவும், நெஞ்சை வருடிய மறக்க முடியாத நிகழ்வும்

எனது தம்பி சைபுல் இஸ்லாமுடைய கல்வி நகர்வில் நெஞ்சை வருடிய மறக்க முடியாத நிகழ்வு...

(இது ஒரு படிப்பினைக்கான பதிவு மாத்திரமே)

அவர் அப்போது கல்முனை சாஹிராக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு என்னிடம் அழைப்பை ஏற்படுத்தி அழுகிறார். தான் எழுதிய 3 பாடங்களில் 2 பாடம் திருப்தியாகவும் ஒரு பாடத்தை எழுத முடியாதளவு தவைலி ஏற்பட்டதாகவும் அதனால் வினாக்களுக்கு சரியாக விடையளிக்க முடியாமற் போய்விட்டது நானா என்கிறார். நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை நமது இலக்கை அடைய முடியும். மனம் தளராமல் ஊருக்கு வா என்கிறேன்.

எங்களது தந்தை சாதாரண மீனவர். மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியிலேயே அவருக்கான செலவீனங்களை மேற்கொண்டு வந்தார். சகோதரர்களான எங்களால் முடிந்த சிறு உதவிகளையும் மேற்கொண்டு வந்தோம். (பலரிடம் புலமைப் பரிசிலுக்காக விண்ணப்பித்திருந்தும் எதுவும் கைகூடவில்லை)

இரண்டாவது முறை பரீட்சைக்கு தோற்ற வேண்டுமென்ற மன தைரியத்தோடும் கடினமான முயற்சியிலும் சகோதரர் சைபுல் ஊரிலே ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நான் அவருக்கு ஒரு ஆலோசனை வழங்கினேன். மூதூரிலுள்ள ஒரு பாடசாலையில் பதிவு செய்து பரீட்சைக்கு தோற்றுவோம். அதனை அவரும் ஏற்றுக்கொண்டார்.

மூதூரில் பிரபல்யமான கல்லூரி ஒன்றில் இணைந்துகொள்வதற்காக சகோதரருடன் பலத்த எதிர்பார்ப்புகளோடு சென்றோம். அங்கு செல்வதற்கு முன்னால் எனக்கு மிகவும் அறிமுகமான விருப்பத்திற்குரிய இரண்டு ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டு அவர்களது வழிகாட்டலுடனேயே அங்கு சென்றோம்.

அதிபர் அறையை தேடினோம். அதற்கு முன்னால் ஒரு ஆசிரியர் குறுக்கிட்டு இந்த விஞ்ஞான கணிதப் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர்களை சந்தியுங்கள் என்றார். அவர்கள் இருவரும் எங்களை ஒரு வகுப்பறைக்குள் அழைத்து உயர்தர வகுப்பில் இணைத்துக்கொள்வதற்கான பேரம்பேசுதலில் ஈடுபட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்ததை எங்களால் ஈடுசெய்யமுடியவில்லை. மிகவும் கவலைதோய்ந்த முகத்தோடு வீடு திரும்பினோம். எங்களது முகத்தோற்றத்தை அடையாளம் கண்ட தந்தையார் அந்தக்கதியிலேயே சொன்னார்கள் விசயம் சரிவரல்லயாக்கும். அதவுடுங்கடா ஏழையாப் பொறந்தா அப்படித்தான். அதுதான் உண்மையும் கூட.

சரி அடுத்ததாக என்ன முயற்சி செய்யலாம் என்று ஆலோசித்தோம். அப்போது சைபுல் ஒரு ஆலோசனை சொன்னார். அக்குறனையில் தனக்கு நெருக்கமான ஒரு நண்பர் இருப்பதாகவும், அவருடைய குடும்பம் அவருக்கு மிகவும் பழக்கமானவர்கள் எனபதாகவும், அவர்கள் அங்குள்ள பாடசாலையில் இணைத்துவிடுவார்கள் எனவும் கூறினார். மீண்டும் வெளியூருக்கா? அத்தோடு கண்டி மாவட்டத்தில் வெட்டுப்புள்ளி அதிகம் அங்கு போட்டியிட்டு உன்னால் ஜெயிக்க முடியுமா? எனவும் வினவினேன். சிரித்துக்கொண்டே சைபுல் பதிலளித்தார். நானா நீ என்னில் நம்பிக்கையிழந்து விடாதே! நான் மிகவும் இலகுவாக வெற்றி பெறுவேன் என்றார்.

அவரது உறுதி எங்களுக்கு மிகவும் நம்பிக்கையளித்தது. அக்குறனை மண் எனது சகோதரனுக்கு அடைக்கலம் கொடுத்தது. குறிப்பாக அவர் தங்கியிருந்த குடும்பத்தினது உதவியை மறந்து விட முடியாது அவர்கள் சொந்த குடும்ப உறுப்பினரைப் போல எனது தம்பியையும் பார்த்துக்கொண்டார்கள்.

இவ்வாறாக வருடமாகியதும் பரட்சைக்கு திருப்தியாகத் தோற்றி அசத்தலான பெறுபேற்றுடன் கணிதத் துறைக்கு பல்கலைக் கழகம் தெரிவானார். (அல்ஹம்துலில்லாஹ்)

அவர் பல்கலைக்கழகம் தெரிவாகிய நாள் முதல் இற்றைவரை திருகோணமலை மாவட்டத்தினது குறிப்பாக மூதூர் மாணவர்களினது விஞ்ஞானம் மற்றும் கணிதத் துறைகளில் அவர்களை பிரகாசிக்கச்செய்வதற்காக அர்ப்பணிப்பு நிறைந்த கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு இம்முறை வெளியாகிய 

Physics பாட பெறுபேறுகள் சான்றாகும்.

(குறிப்பாக மாணவர்களுக்கு வழிகாட்டக்கூடிய பொறுப்புவாய்ந்த ஆசிரியர்களே! யாரையும் அவர்களது தகுதியை பார்த்து ஒதுக்கிவிடாதீர்கள். ஒருநாள் அவர்கள்தான் உங்களது பிள்ளைகளுக்கு (சந்ததிகளுக்கு) உதவும் முதுகெலும்பாக மாறுவார்கள்.)

-Abu Ariya-

4 comments:

  1. Well done..
    My congratulations for this family and their hard work...
    In this world we have good and bad people ever where ?
    When we see bad teachers it is so bad ..
    They like sault..when sault goes bad where do you go ?
    Thank to that Akurana family ..
    They have done s great help in time of need.

    ReplyDelete
  2. Really,it is a very great afford.I appreciate the student and theirs family.

    ReplyDelete
  3. My Thanks goes to that Akurana family.

    ReplyDelete
  4. அல்லாஹ்வின் நாட்டம் உங்கள் முயற்சி அக்குகுறன குடும்ப உதவி

    ReplyDelete

Powered by Blogger.