Header Ads



ஹக்கீம் 3 ஆகி விடுவார், றிசாத் 2 ஆகி விடுவார் - போட்டுத் தாக்கும் எஸ்.பி.

அரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரையோ அரசாங்கத்தையோ எவரும் மாற்ற முடியாது என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு தேர்தலுக்கு வழிவகுத்தால் அதில் ஆளும் கட்சி பெரும்பான்மை அரசாங்கம் அமைப்பது உறுதி. த.தே.கூட்டமைப்பு, ஸ்ரீல.மு.கா, ரிசாட், திகாம்பரம் அணிகள் வீழ்ச்சி காண்பதுடன் மனோ கணேசன் ஒன்றுமில்லாமற்போவார். ஐ.தே.க பெரும் வீழ்ச்சியடையும் இ,தொ,கா மேலும் பலமடையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

ஜனாதிபதித் தேர்தலில் அடுத்த பொது அபேட்சகராக தம்மை வரித்துக்கொண்டே சபாநாயகர் கரு ஜயசூரிய சர்வாதிகாரமாகச் செயற்பட்டு வருகிறார். அது தொடர்பில் ஐ.தே.க பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமையையும பிரதமர் பதவியையும் தக்க வைத்துக்கொள்ளும் நோக்கிலேயே செயற்படுகிறார்.

எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம் எவ்விதத்திலும் மாற்றமடையாது. அரசாங்கமோ, அமைச்சரவையோ, பிரதமரோ மாற்றமடையப் போவதில்லை. வேறு ஒரு பிரதமரை நியமிக்கவும் முடியாது.

அரசாங்கம் வெற்றிகரமாக தமது பயணத்தைத் தொடரும். நாம் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்துள்ளோம். தேர்தல் ஒன்றுக்கு வழிவகுக்கப்பட்டால் நாம் தேர்தலை எதிர்கொள்ளத் தயார். ஐ.தே.க. 65 ஆகக் குறையும். ரவூப் ஹக்கீமின் 7 பேர் 3 பேராகிவிடுவர். ரிசாட் இரண்டையும், மனோ கணேசன் எதுவுமில்லாமற் போவர். திகாம்பரத்தின் 4 இரண்டாகக் குறையும், த.தே.கூட்டமைப்பின் 16 பதின்மூன்றாகிவிடும். அதில் மூன்றை டக்ளஸ் தேவானந்தா பெற்றுவிடு​ேவார். தொண்டமானுக்கு மேலும் பல சேரும் இதன் மூலம் எமக்கு சிறந்த ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்க முடியும்.

தேர்தல் இல்லாவிட்டால் ஜனாதிபதி உருவாக்கிய அரசாங்கத்துடன் சபாநாயகர் விளையாடமுடியாது. அதை முறையாக நடத்த வேண்டியது அவரது பொறுப்பு என்ற அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

9 comments:

  1. அதெல்லாம் சரி அப்பிடியே நடக்குதெண்டு வைப்போம். அதெப்பிடி தேசிக்காயோட கொக்காகோலா சேர்ந்தால் மிளகா பொடி வரும் என்பதற்கான விஞான விளக்கத்தை சொல்லுங்களேன்.

    ReplyDelete
  2. Rangeeeee..........is still active.....

    ReplyDelete
  3. nee inga irikka wendiya aale illa....eppudiyellaam un sinthanay pohuthu...wekkam.ketta arasiyal wathihal ullawaray entha arasum munnoki pohathu..

    ReplyDelete
  4. எஸ் பி சொல்லிவிட்டால் அது நடந்துவிடும். பயமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. Your dream is only day time

    ReplyDelete
  6. SB is a known liar. He only tells lies. Don't listen to him.

    ReplyDelete
  7. இவன் வாயைத்திறந்தால் பொய்யைத்தவிர வேறு ஒன்றும் வெளியே வராது. .. அதுல ஆருடம் வேர சொல்ல ஆரம்பித்து விட்டானா? இவனுக்கும் கூட ஒரு கூட்டம் ஓட்டு போடுகிறது என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை

    ReplyDelete
  8. THE TWO MUSLIM LEADERS ARE PLAYING WITH THE SENTIMENTS OF THE FAITHFUL MUSLIM COMMUNITY. THEY SHOULD STOP THIS DECEPTION ONCE AND FOR ALL, Insha Allah.
    RAUF HAKEEM/SLMC AND RISHAD BATHIUDEEN/ACMC MUST BE ISOLATED IN THE MUSLIM POLITICAL PLAYING FIELD, Insha Allah. THIS IS THE ONLY WAY MUSLIMS CAN GET THEIR POLITICAL FREEDOM AND POLITICAL RIGHTS WHICH RAUF HAKEEM AND RISHAD BATHIUDEEN manipulated to keep it for themselves conniving with the ACJU, Insha Allah.
    ALL MUSLIM MP’S FROM THE POLITICAL IMPRISONMENT OF THE SLMC AND ACMC LEADERSHIP SHOULD SUPPORT HON. MAHINDA RAJAPAKSA IN PARLIAMENT” WHEN PARLIAMENT IS RECONVENED ON NOVEMBER 14th., DECEPTIVE AND MUSLIM LEADERS WILL HAVE NO SAY AFTER THE 14th., NOVEMBER, 2018, Insha Allah.
    The fact remains NOW, the Muslim voters are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS". THE SLMC AND ACMC MP'S SHOULD ALSO ACT ON THEIR OWN NOW, Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the new government of PM Mahinda Rajapaksa.

    SRI LANKA MUSLIMS SHOULD FORM A NEW POLITICAL PARTY JOINING THE SLMC SUPPORTERS/VOTERS (PORAALIGAL AND PAMARAMAKKAL) AND SUPPORTERS OF THE ACMC. The NEW POLITICAL PARTY has to emerge from within the Sri Lanka Muslim Community and should be the POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the new government of PM Mahinda Rajapaksa or any governments that will be formed in the future. THIS NEW POLITICAL FORCE CAN DEMAND THE SAFETY OF THE MINORITY MUSLIMS FROM ANY GOVERNMENTS, Insha Allah. The Muslim Voice” is willing to join any person, group, Muslim organization or jamath which/who will be honest and sincere that will produce "CLEAN" and diligent (“non-munaafikk”) representation and leadership for the Muslims in the future, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  9. அடுத்த தேர்தலில் நீ இல்லாமல் போய்விடுவாய் அதுதான் உண்மை.கடந்த தேர்தலை போன்று மஹிந்த உன்னை இல்லாமலாக்கிவிடுவார்

    ReplyDelete

Powered by Blogger.