Header Ads



எமது Mp களை பலவந்தமாக, உட்படுத்திக்கொள்ள வேண்டாம் - ஜனாதிபதியிடம் ரிஷாத்

நாட்டின் ஜன­நா­ய­கத்தைப் பாது­காக்க வேண்டும். ஜன­நா­ய­கத்தை அழிப்­ப­தற்கு துணை­போகக் கூடாது என்­பதில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உறு­தி­யா­க­வுள்­ளது. இந்த நிலைப்­பாட்டில் எவ்­வித மாற்­ற­மு­மில்லை என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

நாட்டின் அர­சி­யலில் உரு­வா­கி­யுள்ள ஸ்திர­மற்றத் தன்மை தொடர்பில் வின­வி­ய­போதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

நாட்டின் அரசியலில் ஸ்திரத்தன்மையை ஜனநாயக ரீதியில் நிலை நிறுத்துமாறும் நாட்டில் சுமுக நிலைமையினை உருவாக்கி மக்களின் சகவாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்குமாறும் ஜனாதிபதியைக் கோரியிருக்கிறோம்.

வரலாற்று சிறப்புமிக்க எமது நாட்டின் ஜனநாயகத்தை வெல்ல வேண்டும் என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. எமது உறுப்பினர்களை பலவந்தமாக உட்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதியைக் கோரியுள்ளோம் என்றார்.

Fareel

No comments

Powered by Blogger.