Header Ads



சு.க.க்குள் மைத்திரிக்கு எதிராக, உருவாகும் அணி

மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர் தொடர்ந்தும் சட்டவிரோதமாகவும் பலவந்தமாகவும் அரசாங்கமாக இயங்கினால், அல்லது அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒத்துழைத்தால், கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியொன்று தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதால், மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என இந்த அணியினர் கடந்த 28ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த இந்த அணியினர், மகிந்த ராஜபக்ச பதவி விலகாவிட்டால், அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

துமிந்த திஸாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, லசந்த அழகியவண்ண, மகிந்த அமரவீர உள்ளிட்ட அணியினரே இவ்வாறு ஜனாதிபதியிடமும், மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள இந்த அணியினர், அந்த கட்சியில் இணையாது, உருவாக்கப்படும் கூட்டணியில் ஒரு அங்கமாக செயற்பட எண்ணியுள்ளதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. எப்படியோ இந்த மோட்டு mythri யை அரசியலில் இருந்தே விரட்ட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.