Header Ads



கைவிடுகிறது மகிந்த அணி, மைத்திரியின் திட்டம் தோல்வி - செல்வாக்கும் படுமோசமாக வீழ்ச்சி

மைத்திரிபால சிறிசேன இரண்டாவது பதவிக்காலத்துக்காக போட்டியில் நிறுத்தப்படும் வாய்ப்புகள் இல்லை என்று கொழும்பு ஊடகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைத்திரிபால சிறிசேனவை அடுத்த அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்தும் இணக்கப்பாட்டுடனேயே, கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

எனினும், இரண்டாவது பதவிக்காலத்துக்காக மைத்திரிபால சிறிசேன போட்டியிடமாட்டார் என்று, அவருக்கு நெருக்கமான தரப்புகளை மேற்கோள்காட்டி, “அனித்த” என்ற சிங்கள இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலத்தில் மைத்திரிபால சிறிசேனவின் செல்வாக்கு படுமோசமாக வீ்ழ்ச்சியடைந்துள்ளது. அவர் மீது பொதுமக்கள் ஆழ்ந்த அதிருப்தி கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், அவரை அதிபர் வேட்பாளராக நிறுத்துவது பொருத்தமில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளரான, பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் முழுவதும் பதவியில் இருக்க விரும்புகிறார் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியைச் சேர்ந்த ஒருவர், தெரிவித்துள்ளார்.

எனவே, விரைவில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு இல்லை என்றும், அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. Shameful President in the History of Srilanka Maithypala Sorisena.

    ReplyDelete

Powered by Blogger.