Header Ads



இலங்கை மாணவன் படுகொலையும், ஜப்பான் நாட்டவர்களும்...!

- M.Y.Irfhan-

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் காகில்சில் சாமான் வாங்க  சென்றிருந்த வேளையில் அப்போது விசேட தேவையுடையோருக்கு சாஹிரா பாடசாலையில் கற்பிக்கும் ஜப்பான் நாட்டை  சேர்ந்தவரும் அங்கு வந்திருந்தார்    

அவருக்கு பின்னால் நானும் பின் தொடர்ந்தேன் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செல்பியிருந்து  ஓரு பொருள் நிலத்தில் வீழ்ந்து கிடந்தது உடனே அவர் அந்த பொருளை எடுத்து  உரிய இடத்தில் வைத்தது என்னை சிந்திக்க  வைத்தது   

அவருடைய செயல் என்னையும் பின்பற்ற வைத்தது  

அவருடைய  பாடசாலைகளில் சிறு பிராயத்திலிருந்து நல்ல பண்புகளை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதன் அர்த்தத்தின்   வெளிப்பாடே அவரின் செயற்ப்பாடு  

நமது பாடசாலைகளின் ஏட்டுக்கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒழுக்கத்திற்கும் பண்பாட்டுக்கும்  கொடுக்கப்படுவதில்லை என்பது 
கவலை தரும் அம்சம்  

ஒரு இஸ்லாமிய நிகழ்வில் ஒரு அறிஞர் கூறினார் 

ஜப்பானிய பாடசாலைகளில் கொடுக்கப்படும் assignment சிறந்த படங்களை கற்பிக்கக்கூடியது 

ஜப்பானிய மாணவர்கள் அருகியுள்ள பாடசாலைக்கு நடந்து செல்வதே  (close school is best school )வழக்கம் 

அவர்களின் ஒப்படை விசித்திரமானது 
பாடசாலையில் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பேக் கொடுக்கப்படும் அடுத்து நாள் பாடசாலைக்கு வரும் வழியுள்ள குப்பைகளை சேகரித்து பாடசாலைக்கு  கொண்டுவர வேண்டும் 

பாடசாலையில் அதன்  நிறையை அளவிட்டு புள்ளி வழங்கிறார்கள்

இதுதான் ஜப்பானியர்களின் ஒப்படை 

நமது பாடசாலைகளில் ஒப்படை என்றால் இல்லாத பொல்லாத எல்லாத்தையும் கொண்டவர  சொல்வார்கள் இறுதில்  பெற் றோர்களுக்குத்தான்  பெரும் திண்டாட்டம் 

பல அழிவுக்கு மத்தியில் ஜப்பான் எழுந் தற்கு காரணம் அவர்களின் ஒழுங்கு உண்மைத்தன்மை நேர முகாமைத்துவம்
 போன்றன

இரண்டு நாட்களுக்கு முன்னர்  ஒரு மாணவன் சக மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கும் படு மோசமான செயல் நடந்தேறியிருக்கிறது

இன்று எமது பாடசாலை மாணவர்களுக்கு   தேவையானது பண்பாட்டு ரீதியான எழுச்சியே  

No comments

Powered by Blogger.