Header Ads



மைத்திரியுடனான பேச்சு, இணக்கப்பாடின்றி முடிந்தது

ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் இரண்டாம் திகதி இரண்டு தரப்பினரும் மீளவும் சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் ஜனாதிபதி இன்று முக்கிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.

அந்த வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்று மாலை சந்தித்து பேசியிருந்தார்.

இதன் போது மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மீளவும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்து பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதிவியை வழங்குவதற்கு ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

இந்த சந்திப்பு நிறைவு பெற்ற பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியினரை ஜனாதிபதி சந்தித்து பேசியிருந்தார். எனினும், இந்த சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. He is fooling again.................

    ReplyDelete
  2. This is just another drama from my3. He wants to drag this issue until SC issues its verdict.

    ReplyDelete

Powered by Blogger.