Header Ads



ஞானசாருக்கு எதிரான மனு, திரும்ப பெறப்பட்டது

ஞானசார தேரரை விடுதலை செய்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக நீதிபதி ஒருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று -23- மீளப்பெறப்பட்டுள்ளதால் குறித்த வழக்கு நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தலஹேன பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு பள்ளிவாசல் ஒன்றை தாக்கியமை மற்றும் நபர்கள் இருவரை தாக்கி இரண்டு தங்கச் சங்கிலிகளை கொள்ளையடித்தமை தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேர் மீது 11 குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்த போதும் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்திருந்தாகவும் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக முறையாக சாட்சிகளை ஆராய்ந்து விசாரணை செய்யாது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்யப் போவதாக குறித்த நீதிபதி வழக்குத் தாக்கல் செய்தவேளை குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந் நிலையில் அவ்வாறு தெரிவித்து வழக்குத்தாக்கல் செய்த நீதிபதியே குறித்த வழக்கை மீள பெற்றுக்கொண்டமையால் குறித்த வழக்கு நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Now MR is in power, legally or illegally, this particular Judge would have been threatened by MR’s goons.

    ReplyDelete

Powered by Blogger.