Header Ads



முரளிதரனை முட்டாளாக, வர்ணிக்கும் மனோ கணேசன்

மூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் குறித்த கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நேற்று முன்தினம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனநாயகத்தைவிட நாட்டு மக்களுக்கு மூன்று வேளை சாப்பாடுதான் முக்கியம் என தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து பல ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல விமர்சனங்களை தனதாக்கியிருந்தது.

இது தொடர்பில் விமர்சிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது டுவிட்டர் தளத்தில் குறித்த பதிவை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"மூன்று வேளை சாப்பாடு" என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும்.

7 comments:

  1. மூன்று வேளை சாப்பாட்டிற்காக எந்த கட்டத்திற்கும் போவார் போல் உள்ளது முரளிதரனின் ரசிகர்கள் வெட்கி தலை குனிய வேண்டும் ஆள் இன்னமும் வளரவில்லை (அறிவில்)

    ReplyDelete
  2. பசிவந்தால் பத்தும் பறக்கும்.பசியில் தத்தளிப்பவர்களுக்கு மட்டும்தான் அது விளங்கும். பசியைப் பற்றி மணித்தியாலக் கணக்கில் வம்பளப்பவர்களுக்கு அதன் அனுபவம் நிச்சியம் விளங்க முடியாது. இந்த நாட்டு மக்களைப் பசியில் வாடவிட்டு ஒருசிலர் செய்யும் அரசியல்பற்றித்தான் முரளீதரன் குறிப்பிட்டல்லாமல் பசியைவிட ஜனநாயகம் பெறுமதியற்றது என்ற கருத்தில் குறிப்பிடவில்லை.

    ReplyDelete
  3. எறி போல்

    ReplyDelete
  4. when UNP robbed the central bank, postponed and postponing PC elections, increased taxes without any care about people etc....etc....where was the democracy hiding ? that is what meant by Murali.

    ReplyDelete
  5. Murali you are right..we will with you

    ReplyDelete
  6. Political joker mano?.......

    ReplyDelete
  7. Muralis' statement 200% correct..

    வயித்து பசியோடு இந்த அரசியல்வாதிகளுக்கு பின்னால் ஜனநாயகத்திற்கு போராட அவர்களின் அடிவருடிகளுக்குத்தான் சரிவரும்...
    ரணிலுக்காக எந்த அன்றாடங்காய்ச்சியும் 2 நாள்கூட போராட மாட்டான்.. அவன் குடும்பத்தை பட்டினியில் போட்டு இந்த போலி ஜனநாயகத்திற்கு எவன் வருவான்

    ReplyDelete

Powered by Blogger.