Header Ads



மஹிந்த - மைத்­திரி சபா­நா­யகர் மீது பழி­சு­மத்தி, சட்­ட­வி­ரோ­த­மாக ஆட்­சியை தக்­க­வைக்­க முயற்­சி

பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடி­யாது மஹிந்த –- மைத்­திரி தரப்­பினர் சபா­நா­யகர் மீது பழி­சு­மத்தி சட்­ட­வி­ரோ­த­மாக ஆட்­சியை தக்­க­வைக்­கவே தொடர்ந்தும் முயற்­சித்து வரு­கின்­றனர். யார் என்ன முயற்­சி­களை எடுத்­தாலும் இந்த அர­சாங்கம் சட்­ட­வி­ரோத அர­சாங்கம் என்ற சபா­நா­ய­கரின் நிலைப்­பாட்­டி­லேயே நாமும் உள்ளோம் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வி­கின்­றது. இரண்டு தரப்பும் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க ஜன­நா­ய­கத்தை மீறிய வகையில் செயற்­ப­டு­கின்­றன எனவும் குற்றம் சுமத்­து­கின்­றது.

தற்­போது நிலவும் அர­சியல் நிலை­மைகள் மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகிய இரண்டு கட்­சி­யி­னரும் பெரும்­பான்­மையை நிரு­பிக்க எடுக்கும் முயற்­சிகள் குறித்து கருத்து தெரி­விக்­கும்­போதே மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி எடுத்த நட­வ­டிக்­கைகள் மற்றும் அவர் அர­சாங்­கத்தை வழி­ந­டத்தும் செயற்­பா­டுகள் என அனைத்­துமே ஜன­நா­யக விரோ­த­மா­ன­தாகும். பாரா­ளு­மன்ற விதி­மு­றைகள் மற்றும் அர­சி­ய­ல­மைப்­பினை மீறிய வகையில் அவ­ரது செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் மஹிந்த ராஜபக் ஷவி­னரும்  தமக்­கான பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடி­யாது ஏனைய கட்சி உறுப்­பி­னர்­களை விலை­கொ­டுத்து வாங்கும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. ஒவ்­வொரு நப­ருக்கும் கோடிக்­க­ணக்கில் பேரம் பேசும் நிலைமை இன்­றைய அர­சியல் சூழலில் உரு­வா­கி­யுள்­ளது.

மேலும் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவின் கருத்­துடன் நாம் இப்­போதும் இணங்­கு­கின்றோம். இந்த அர­சாங்கம் சட்ட விரோ­த­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே எந்த வகை­யிலும் புதிய அர­சாங்­கத்­தையோ அல்­லது அவர்கள் நிய­மித்து வரும் அமைச்­சுக்­க­ளையோ  ஏற்­று­க்கொள்ள  முடி­யாது. எனினும் மஹிந்த – மைத்­திரி தரப்­பினர் தமது பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடி­யாது சபா­நா­யகர் மீது குறை கூறு­வ­தா­கவே நாம் கரு­து­கின்றோம். தம்மால் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடியும் என்றால் பாரா­ளு­மன்­றத்தில் 113 பெரும்­பான்­மையை காட்டி மஹிந்த தரப்பு அர­சாங்­கத்தை கொண்­டு­செல்ல வேண்டும். இல்­லையேல் தாம் ஒதுங்­கிக்­கொண்டு ஆட்­சியை கொண்­டு­செல்ல இட­ம­ளிக்க வேண்டும்.  இவை இரண்டும் இடம்­பெ­றாது போனால் தேர்தல் ஒன்­றினை உட­ன­டி­யாக நடத்த இரண்டு தரப்பும் இணக்கம் கண்டு உட­ன­டி­யாகப் பொதுத் தேர்­தலை நடத்த வேண்டும்.

இவர்­களின் அதி­காரப் போட்­டியால் நாட்டின் ஜன­நா­யக  செயற்­பா­டுகள் முற்று முழு­தாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. மக்­களை நடு­வீ­திக்கு இறக்கி இவர்­களின் அர­சியல் பலத்தை வெளிப்­ப­டுத்தும் கூத்துக்களே இன்று இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான ஆட்சியாளர்களை ஆட்சிக்கு கொண்டுவந்த மக்களையே இவர்கள் தவறாக வழிநடத்தும் அரசியல் கலாசாரத்தை இப்போதாவது மக்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.