October 11, 2018

பள்ளிவாசலில் தொழுவதற்கு, பெண்களுக்கு அனுமதி வேண்டுமாம்...!

மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்" என்று முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளது. 

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் நம்பிக்கை பெற்ற முஸ்லிம் பெண்கள் "மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்" என்று சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளனர்.  மசூதியில் பெண்கள் தொழுகை நடத்தவும், இமாம்களாக பெண்களை நியமினம் செய்ய அனுமதிக்கவும் சுப்ரீம் கோட்டை நாட கேரளாவில் உள்ள என்ஐஎஸ்ஏ என்ற பெண்கள் கூட்டமைப்பு விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளது.

முஸ்லிம் மதத்தில் பாலின சமத்துவத்திற்காக பிரசாரம் மேற்கொண்டுவரும் அமைப்பு, பலதார திருமணம், நிக்கா ஹலாலாவை (விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் அந்த நபரே திருமணம் செய்வது) அனுமதிக்கும் முஸ்லிம் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. என்ஐஎஸ்ஏ அமைப்பின் தலைவர் வி.பி.ஜுஹாரா பேசுகையில், ''புனித குர்ஆன் நூலிலும், இறைத்தூதர் முகமது நபியும் ஒருபோதும் பெண்கள் மசூதிக்குள் வந்து தொழுகை நடத்தக்கூடாது என்று கூறியதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஆண்களைப் போன்று, பெண்களும் தங்களுக்குரிய நம்பிக்கையின் அடிப்படையில், அரசியலமைப்பு சட்ட உரிமைகள்படி வழிபாடு நடத்த உரிமை உண்டு. சபரிமலையை போன்று, மசூதிகளிலும் அனைத்து பெண்களும் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். இதில் காட்டப்படும் பாகுபாடுகள் அகற்றப்பட்டு, உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு செல்வது தொடர்பாக எங்களுடைய வழக்கறிஞருடன் பேசி வருகிறோம். விரைவில் மனுத்தாக்கல் செய்வோம் என கூறியுள்ளார்.

4 கருத்துரைகள்:

இந்த நிலைமை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது என நாம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தோம். அதனை மிகவும் சில ட்ரஸ்டிமார்கள் ஏற்றுக் கொண்டு செயல்பட்டனர்.பிறகு படிப்படியாக அங்கும் இங்கும் இந்த மாற்றம் மிக அருமையாகக் காணக்கிடைத்தது. ஆனால் மனநிலையில் எந்த மாற்றமும் தென்படவில்லை. பள்ளிவாயல்களில் ஆண்அதிகாரம் தான் தலைத்து ஓங்குகின்றது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சிங்கப்பூரில் பள்ளியாயலில் ட்ரஸ்டி ஆணாக இருக்கும் போது உதவித்தலைவர் ஒரு பெண்ணாக இருப்பார். பள்ளிவாயல் நிர்வாக சபையில் 50% ஆண்களுக்கும் 50% பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தவறு என்ன? இதை எங்கள் நாட்டில் பள்ளிவாயல்களைக் கட்டிக்காத்து அரசியல் செய்யும் எருமைகளுக்கு இன்னும் விளங்கவில்லை. இந்தியாவில் அந்த நிலைமை படுமோசம். அதன் விளைவுதான் பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்கு நீதிமன்றத்தை நாடிச் செல்கின்றனர். இந்த நிலைமை இலங்கையில் வரும்காலம் மிகவும் அண்மியுள்ளது. எனவே பொதுவிவகாரங்களிலும் மார்க்க விடயங்களிலும் இஸ்லாம் ஆண், பெண்கள் இருசாராருக்கும் 50% -50% உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியிருக்கின்றது. அதை பக்கச் சார்பான பெரும்பான்மையான ஆண் முஸ்லிம் என தன்னைக்கூறிக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த பிரச்னைக்கு மிகவிரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

There is no prohibition in Islam for ladies to offer prayers at Masjids. We muslims are the ones who later invented rules and preventing ladies from offering salah when they are out of home. Men have the facilities to offer prayers wherever they go, but not ladies, those places with facilities for ladies to pray are also very poorly administered.

@Professional Translation Services நீங்கள் முஸ்லிமா இல்லை இஸ்லாமிய போர்வையிலிருக்கும் தமிழரோ தெரியாது. முஸ்லிமாகயிருந்தால் ஆனால் உம்மை போன்று இப்படி இத்துப்போன கருத்துக்களை தூக்கிக்கொண்டு திரிய சமுதாயத்தில் 1 % கூட்டம் இருப்பதும் உங்களுடைய பின்னணிகளை என்னவென்று முஸ்லிம்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். இஸ்லாம் பெண்களுக்கு அழகான உரிமைகளை வகுத்துள்ளது அது இன்றைய சூழலில் சரியான முறையில் பயன்படாமையால் உம்மை போன்ற அந்நிய கைக்கூலிகள் சந்தில சிந்து பாட வேண்டிய நிலை உருவாகிவிட்டது. ஆனால் நிச்சயமாக மார்க்க விரோதமான உம்முடைய கருத்துக்கள் இந்த சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட போவதில்லை. காதியானி ஷியா காபீர்கள் எப்படி புதுமைகளை உட்படுத்த முயற்சித்து அவர்களுக்கென்று ஒரு தனி மதத்தை உருவாக்கி கொண்டார்களோ அதை போன்று உம்முடைய கூட்டமும் ஒரு மதத்தை உருவாக்கி கொண்டு வீட்டு பெண்களை உங்கள் மதஸ்தளத்தில் தர்மகத்தாவாக நியமித்துக்கொள்ளுங்கள்

Post a Comment