Header Ads



நீர்கொழும்பு சாந்த நிகுலசை வீழ்த்தி, சம்பியன் ஆகியது போருத்தொட்ட அல் பலாஹ்


நீர்கொழும்பு மாரிஸ்ட்டெலா கல்லூரியில் 13.10.2118. அன்று நடைபெற்ற,   நீர்கொழும்புப் பிரதேச  பாடசாலைகளின் 12 வயதுக்கீழ் மாணவர்களுக்கான விஷேட கால்பந்தாட்டப் போட்டியில், போருத்தொட்டை  அல்பலாஹ் மஹா வித்தியாலய மாணவர்களும் பங்குபற்றி, இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி சாந்த நிகுலஸ் தேசிய பாடசாலை மாணவர்களுடன் இறுதிப் போட்டியில் பங்கு பங்கு கொண்டு சம்பியன் ஆகினர்.

அல்பலாஹ் மாணவர்களின் சாதனையாகவே அமைந்த இப்போட்டிக்கு,  அல்பலாஹ் ஸ்போட்ஸ் கழக உருப்பினர்ளுடன், மாநகர சபை  உறுப்பினர் ஹாரிஸ், பாடசாலையின் S D S - O B A அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர் .

வெற்றிக் கிண்ணங்களை பெற்றுக் கொண்ட  மாணவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து ஊர் மக்கள் உற்சாகப்படுத்தினர்.

மாணவர்களின் வெற்றிக்கும் பாடசாலையின் பெயருக்கும் பெறுமையைப் பெற்றுக்கொள்ளக்  காரணமாக மிகவும் கடினமாக அர்ப்பனிப்புடன்  செயல்பட்டவர்  அல்பலாஹ்வின் பிரதி அதிபர் அப்துல் காதர்.

அத்துடன் சம்பியன் ஆகிய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை (15) ஆம் திகதி பாடசாலை நேரத்தின் போதும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.