Header Ads



ஞானசாரரை மன்னிக்குமறு அவரது தாய், ஜனா­தி­பதிக்கு உருக்கமான கடிதம்

-ARA.Fareel-

அர­சாங்­கத்தில் சட்டம் ஒரு­தலை பட்­ச­மா­கவே செயற்­ப­டு­கின்­றது. தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஷ்­வ­ர­னுக்கும் வழங்­கப்­ப­டு­கின்ற சலு­கைகள் பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சார தேர­ருக்கு வழங்­கு­வதில் அர­சாங்கம் பார­பட்சம் பார்க்­கின்­றது என தெரி­வித்த ராவ­ண­ப­லய அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் மாகல்கந்தே சுதந்த தேரர், ஞான­சா­ர­ரது விடு­தலை தொடர்பில் கடந்த காலங்­களில் நாங்கள் பாரிய முயற்­சி­களை மேற்­கொண்டோம். ஆனால் அவற்றில் எவ்­வி­த­மான தீர்வும் இது­வ­ரையில் எட்­டப்­ப­ட­வில்லை.

ஆகவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்க வேண்டும் என கண்­ணீ­ருடன் கோரிக்கை விடுத்தார்.

பொது­பல சேனா  அமைப்பின் அலு­வ­ல­கத்தில் நேற்று  முன்தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஞான­சார தேரர் அன்று நீதி­மன்­றத்தில் தெரி­வித்த கருத்­துக்கள் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­த­தாகக் காணப்­ப­ட­வில்லை. இரா­ணுவ புல­னாய்வு அதி­கா­ரி­களை சிறை வைப்­ப­தற்கு எதி­ரா­கவே அவர் கருத்து தெரி­வித்தார்.

எனினும் அவ்­வாறு கருத்­துக்­களைத் தெரி­வித்­ததன் பின்னர் தான் தெரி­வித்த கருத்­துக்­களில் ஏதேனும் தவ­றுகள் காணப்­பட்டால் மன்­னிக்­கு­மாறும் ஞான­சார தேரர் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார்.

இருப்­பினும் அவ­ருக்கு கடூ­ழிய தண்­டனை  பௌத்­த­மத கோட்­பாட்­டுக்கு முர­ணாக விதிக்­கப்­பட்­டது. இவ­ரது கருத்­துக்கள் முர­ணாக காணப்­பட்­டாலும் பௌத்த மதத்தை பாது­காப்­பதே அவ­ரது நோக்­க­மாக காணப்­பட்­டது. எனவே தான் பொது­ப­ல­சேனா அமைப்பு அவ­ரு­டைய விடு­த­லையை தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றது.

தொடர்ந்து நாட்டில் இன­வாதம் பேசி வடக்­கி­னையும், தெற்­கி­னையும் பிரிக்கும் வித­மாக அர­சாங்­கத்தின் ஆத­ர­வுடன் செயற்­படும் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு எதி­ராக இது­வரையில்  எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை, மறு­புறம் மீண்டும் விடு­தலை புலி­களின் இயக்கம் தோற்றம் பெற வேண்டும் அதுவே எமது நோக்கம் என்று பகி­ரங்­க­மாக அறி­வித்த  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஷ்­வ­ர­னுக்கு பிணையில் செல்லக்கூடிய அள­விற்கு சட்டம் செயற்­ப­டு­மாயின் ஏன் ஞான­சார தேரரின் விவ­கா­ரத்தில் இவ்­வ­ளவு  இறுக்­க­மாக காணப்­ப­டு­கின்­றது. இதன் பின்னணியை அறிய முடியாதிருக்கிறது.

தமிழ் அர­சியல் கைதிகளின் விடு­தலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரும், அர­சாங்க அமைச்­சர்­களும் குரல் கொடுப்­பதை போன்று ஏன் பாரா­ளு­மன்­றத்தில்  உள்ள அமைச்­சர்கள்  ஞான­சார தேர­ருக்கு ஆத­ர­வாக செயற்­பட முன்­வர மறுக்­கின்­றனர். இவ­ரது கைது அர­சாங்­கத்தின் நெடுநாள் விருப்­ப­மா­கவே காணப்­பட்­டுள்­ளது என்ற சந்­தேகம் தற்­போது தோற்றம் பெற்­றுள்­ளது.

 ஞான­சார தேரரின் விடு­தலை குறித்து அவ­ரது தாயார் ஜனா­தி­ப­திக்கு உருக்­க­மான கடி­த­மொன்­றினை  அனுப்பி வைத்­துள்ளார். இவ்­வி­ட­யத்தில் ஜனா­தி­பதி தனது நிறை­வேற்று அதி­கா­ரத்­தினை செயற்­ப­டுத்த வேண்டும்.

 இவ­ரது தண்­டனை தொடர்பில் மீள் பரி­சீ­லனை செய்து பொது­மன்­னிப்பு வழங்க வேண்டும். இவ்­வி­ட­யத்தில் அவ­ருக்கும் பல தடைகள் ஏற்­படும்  ஆகவே அவர் தன்­னிச்­சை­யான தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
-Vidivelli

2 comments:

  1. இந்த தரித்திரியத்தை விடுதலை செய்வதட்கு பதிலாக வடக்கில் ஒரு குடும்பம் அம்மா இறந்து தந்தை சிறையில் வாழுகின்றார் அவரை உடனடியாக விடுதலை செய்தால் அந்த அப்பாவி பிள்ளைகளுக்கும் சமூகத்துக்கும் ஒரு நன்மை சரி கிடைக்கும்.

    ReplyDelete
  2. இப்படி ஒரு இனவாத பேயை பெற்றதற்கு இந்த தாய் வெட்கப்பட வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.